இயன்றதை செய்து இடஒதுக்கீடு காப்போம்! - அணிதிரண்டு வாரீர்! வாரீர்!
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 109 சாதிகளில், வன்னியர் ஒரு சாதிக்கு மட்டும் மொத்தமுள்ள 20% இடஒதுக்கீட்டில் 13% இடங்களை வழங்கி, தேர்தல் களத்தில் அறுவடைகாண முயன்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி.திரு.பழனிச்சாமி அவர்களின் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் நலன்களையும் பாரபட்சமின்றி பாதுகாக்காமல், அரசின் முடிவுக்கு துணைபோகும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாளை (21.01.21)காலை 10 மணியளவில், சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், நம் வருங்கால சந்ததிகளுக்கு ஆக்சிஜனாகவுள்ள இடஒதுக்கீட்டை பாதுகாத்திட இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சொந்தங்கள் அணிதிரண்டு வாரீர்... வாரீர்.. என அழைக்கின்றோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.
இராஜகம்பளத்தார் ஓபிசி-டிஎன்டி உரிமை மீட்புக்குழு,சென்னை.