தொடங்கியது தொட்டிய நாயக்கர் படையின் முற்றுகை போராட்டம்.
MBC பட்டியலிலுள்ள 108 ஜாதிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறந்தள்ளி வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் 13% உள் ஒதுக்கீடு வழங்க முயற்சிக்கும் எடப்பாடி அரசுக்கு உடந்தையாக செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு எதிராக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கியது.
இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.இராமராஜ், பொதுச்செயலாளர் திரு.இராதாகிருஷ்ணன், வீ.க.பொ.நலச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பெருமாள், திரு.முருகன், திரு.இராமர், பதவஞ்சேரி திரு.முருகன், இராஜகம்பளத்தார் ஓபிசி-டிஎன்டி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முகப்பேர் திரு.இராஜா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.