கம்பளத்தாரின் முற்றுகையில் திணறும் மதுரை ...

DNT-கோரிக்கைக்களை வலியுறுத்தி இன்று காலை மதுரை ஆரப்பாளையம் குரு தியேட்டர் எதிரே தொடங்கிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளின் சார்பில், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கத்திலிருந்து, தலைவர் திரு.பழனிச்சாமி தலைமையில், நாமக்கல்லிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் 2 பேருந்துகளிலும்,

தமிழ்நாடு இராஜகம்பளத்தார் முன்னேற்றக்கழகத்திலிருந்து, தலைவர் திரு.இரவி நாயக்கர் மற்றும் திரு.அருண்நாயக்கர் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்ப்பட்டவர்களும், துணைத்தலைவர் திரு.செல்லப்பாண்டியன் தலைமையில் நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், இராஜகம்பள (தொட்டிய நாயக்கர்) மகாஜன சங்கத்திலிருந்து, பொதுச்செயலாளர் திரு.சௌந்திரபாண்டியன் தலையில் தேனி மாவட்ட நிர்வாகிகளும், தேனி மாவட்டம் ஆனைமலையாம்பட்டியிலிருந்து திரு.ஜக்குசாமி, திரு.முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் 30-க்கும் மேற்பட்டடோர்களும்,

அருப்புக்கோட்டை திரு.சந்திரசேகர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர். DNT உரிமைகளை வென்றெடுக்க களமிறங்கிய அனைத்து உறவுகளுக்கும், சென்னை வீ.பொ இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...