புதிய அத்தியாயம் படைத்தது புரட்சிப்படை! - மஹாஜன சங்க பொதுச்செயலாளர் பெருமிதம்!
இராஜ கம்பளம் தொட்டிய நாயக்கர் மகாஜன சங்கம், மதுரை.
அன்பு உறவுகளே..
புதிய அத்தியாயம்
படைத்தது புரட்சிப்படை....
தொட்டிய நாயக்கர் படை திரண்டது காணீர்...
வாழும் வீரபாண்டிய கட்டபொம்மன்களாக
ஊமைத் துரைகளாக நம்
இனத்தின் இளைஞர்கள்
களமாடிய காட்சி கண்களில்
கசிவை ஏற்படுத்தியது....
ஆம் உறவுகளே... DNT கோரிக்கைகளை வலியுறுத்தி 30.01.2021 அன்று மதுரை, ஆரப்பாளையம் குரு தியேட்டர் சந்திப்பில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தைத்தான் கூறுகின்றேன்.
நம்மோடு களத்தில் நின்ற 68 சமுதாய மக்களின் பணியும் மகத்தானது. முக்கியமாக முக்குலத்தோரின் ஒருங்கிணைப்பும் ஆட்களை போராட்ட களத்திற்கு சேரத்ததும் உணவு . தண்ணீர் போன்ற அடிப்படை வசதி களை அயராது அவரவர் இடத்திற்கே சென்று வழங்கியதும் பாராட்டுக்குரியது.
நமது தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் சார்பில் இப்போராட்டத்தில் ஆரம்பம் முதல் சோர்வின்றி தொடர்ந்து பணியாற்றி வரும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை நிறுவன தலைவர் திரு. பழனிச்சாமி அவர்கள் பணி போற்றத்தக்கது. நாமக்கல்லில் இருந்து அவர்தம் படையுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் மற்றும் DNT ஒருங்கிணைப்பாளர் ஆன திரு.ராமராஜ் மேலும் அவர்கள் சங்கத்தின், பொதுச் செயலாளர் திரு.செந்தில் குமார் அவர்கள், தலைவர் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் அந்த சங்கத்தின் நிர்வாகிகளின் வழிகாட்டுதல்களால் தென்மாவட்டங்களில் குறிப்பிடும் படியாக நம் இனத்தவரை இணைத்து போராட்டத்தை வலுவடையச் செய்த பணி சிறப்பானது..
விடுதலைக்களம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் திரு.கொ.நாகராஜன் மற்றும் அவரது படையினரும், கம்பளத்தார் காப்பு பேரவை நிறுவனத் தலைவர் திரு.ரவி நாயக்கர் துணைத் தலைவர் திரு.விஜயகுமார் மற்றும் அவர்களின் தளபதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்ததும் பாராட்டுக்குரியது.
நமது சங்கத்தின் சார்பில் நானும் தலைவர் திரு.மாரையா அவர்களும் கலந்து கொண்டோம். மதுரை ஆரப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு வீரியமான வெற்றிகரமான போராட்டமாக அமைந்தது.
பின் அமைச்சர் பெருமக்கள் நேரில் வருவதை அறிந்து பொதுமக்களின் நன்மை கருதி பஸ் மறியலை விலக்கி போக்குவரத்து சீரடைய உதவினோம். பின்பு மாலை அமைச்சர் பெருமக்கள் வரும் வரை போராட்ட கோசங்களை நம் இனத்தினர் எழுப்பியபடி இருந்தனர்.அமைச்சர்கள் மாண்புமிகு திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மாண்புமிகு திரு.செல்லூர் ராஜூ அவர்களும் போராட்டகளத்திற்கே வந்து சமுதாய தலைவர் களிடம் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு முதலமைச்சர் அறிவிப்பார்கள் என்ற உறுதிமொழிஅளித்ததின் பேரில் போராட்டம் முடிவடைந்து போராளிகள்அமைதியாக கலைந்து சென்றனர்.
DNT போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.....
நமது சந்ததியினருக்கு தேவையான கல்விச் சலுகைகள், இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை வென்றெடுப்பதற்கான முதல் படி இதுவே. இருப்பினும் நமது உறவுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தருணமும் இது தான். ஏனெனில் நமது உரிமைகளை வென்றெடுக்க இனியும் போராட வேண்டும் என்றால், இதை விட அதிக உத்வேகத்துடன் களமிறங்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.
களத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வாழ்க தொட்டிய நாயக்கர் சமுதாயம்..... வளர்க கட்ட பொம்மன் புகழ்..... வெல்க DNT போராட்டம்.
வெற்றி வேல்...... . வீரவேல்....
வாழ்த்துகளுடன்,
திரு.சௌந்தர பாண்டியன், பொதுச் செயலாளர்
இராஜ கம்பளம் தொட்டிய நாயக்கர் மகாஜன சங்கம், மதுரை