சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்காதே! தொட்டிய நாயக்கர்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு!
MBC-பிரிவில் 116 சாதிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களின் கருத்துக்களை கேட்காமலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சட்ட விரோதமாக உள்இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று 115 சமுதாயங்கள் மற்றும் DNT- சீர்மரபின பழங்குடிகள் சார்பில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
இதுசம்மந்தமாக நேற்று (01.02.2021) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் Dr.தனுஷ்கோடி அவர்களின் தலைமையில், இராஜகம்பளத்தார் ஓபிசி-டிஎன்டி ஒருங்கிணைப்பாளர் முகப்பேர் திரு.ராஜா, அமுதா புட்ஸ் உரிமையாளர் திரு.ஆறுமுகச்சாமி ஆகியோர் ஆட்சியாளர் திருமதி.சீத்தாலட்சுமி, IAS அவர்களிடம் மனு அளித்தனர்.
அதேபோல் நாமக்கல் மாவட்டம் ஆட்சியரிடம் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை சார்பில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் காந்தியவாதி திரு.இரமேஷ் மனு அளித்தார்.