அருப்புக்கோட்டை தொகுதியை கைப்பற்றுவாரா? கடுமையாக முட்டிமோதும் இராஜகம்பளத்து வேட்பாளர்...
அடுத்த ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழகத்தில், அரசியல்களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஏற்கனவே முதல்வர் மற்றும் பிரதான எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோர் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட அந்தந்த கட்சியில் உள்ள திறமையும், தகுதியும் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கட்சிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றன. அதேநேரத்தில் விடுதலைக்களம் போன்ற அரசியல் சார்ந்த சமுதாய இயக்கங்கள் தேர்தல் களத்தில் பிரதான கட்சிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட வியூகம் வகுத்து வருகின்றது. அதேபோல் தொட்டிய நாயக்கர்களை அரசியல் கட்சிகள் புறக்கணிப்பதாக கருதும் இளைஞர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு இராஜகம்பளத்தார் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பைத் துவங்கியுள்ளனர். கம்பளத்தார்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் பட்சத்தில், நேரடியாக களம் காண தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே, அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ள சமுதாய தலைவர்களும் அவர்கள் சார்ந்த கட்சிகளில் வாய்ப்புக்கேட்டு கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இவர்களில் முதன்மையானவர் வலுக்கலொட்டி மைனர் திரு.P.V.இராதாகிருஷ்ணன் அவர்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட கடும் முயற்சி செய்வதாக "தமிழக அரசியல்" என்ற வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அவரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி: தமிழக அரசியல்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.