வெற்றிப்பாதையை நோக்கி DNT போராட்டம்! துணைமுதல்வருடன் போராட்டக்குழு சந்திப்பு!

கடந்த 30.01.2021-ல் மதுரை, ஆரப்பாளையம், குரு தியேட்டர் அருகில் 68 சமுதாயங்களைச் சேர்ந்த சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த தமிழக வனத்துறை அமைச்சர், மாண்புமிகு திண்டுக்கல் திரு.சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் திரு.ராஜு ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது DNT மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் இன்று (04.02.21) காலை தலைமை செயலகத்தில், தமிழக துணைமுதல்வர் திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், திண்டுக்கல் திரு.சீனிவாசன், வருவாய்த்துறை அமைச்சர் திரு.உதயக்குமார் ஆகியோருடன் முதல்வரின் செயலாளர் திரு.விஜயகுமார் IAS., மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் திரு.சந்திரமோகன், சீர்மரபினர் நல வாரியத்தின் தலைவர் திரு.சோ.அய்யர் IAS., அவர்களும் கலந்துக்கொண்டனர்.
இதில், 68 சமுதாயங்களை சேர்ந்த சீர்மரபினர் நலசங்கத்தின் பொருளாளர் திருமதி.தவமணி தேவி, சீர்மரபினர் நலச்சங்கத்தின் செயல் தலைவர் திரு.சோலை ராஜா, வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தின் சார்பில் திரு.முனுசாமி கவுண்டர், வலையர் சமுதாயத்தின் சார்பில் திரு.ராசிராம், வீரபோயர் சமுதாயத்தின் சார்பில் திரு.பாலசந்தர், வேட்டைக்கார நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் திரு.சங்கர் ஆகியோர்களுடன் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.செந்தில்குமார் அவர்களும் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் DNT பிரிவினருக்கு ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும், மத்திய அரசு உத்தரவுப்படி DNT மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு தனிஅதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என்ற இரண்டு பிரதான கோரிக்கை போராட்டக்குழுவின் சார்பில் வைக்கப்பட்டது. மேலும், அந்தந்த சமுதாயத்தினர் சந்திக்கும் பிரச்சனை கூறித்தும் துணை முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் பேசுகையில், பல மாவட்டங்களில் DNT சான்றிதழ் விண்ணப்பிக்கும் போது நிராகரிக்கப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் கடும் மனவுளைச்சளுக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தவிர தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு மட்டும் RTO அவர்களிடம் சாதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட வேண்டும். என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அனைத்து கோரிக்கைகளையும் கனிவுடன் கேட்டறிந்த துணை முதல்வர் தமிழகத்தின் இட ஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தில் 9வது அட்டவணையில் வைக்கப்பட்டு இருப்பதாலும், இது குறித்தான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருவதாலும், ஒரு சில மாதங்களில் வழக்கின் தீர்ப்பு வர இருப்பதால். உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு ஒற்றை சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவு எடுத்துக்கொள்ளாம் என்று அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்ஸ்நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கும், ஒற்றை சான்றிதழ் வழங்குவதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் ஆலோசனை பெற்று வழக்கை பாதிக்காத வகையில் இருந்தால் ஒற்றை சான்றிதழ் வழங்கலாம் என்றும், இதற்கு DNT சட்ட ஆலோசகர்களும், தமிழக அரசு அதிகாரிகளுடன் நடத்த உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களுக்கான செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதற்கு அடுத்த படியாக DNC/DNT என இரட்டை சான்றிதழ் வழங்குவதால் மத்திய அரசு வழங்கும் சலுகைளை தொட்டிய நாயக்கர் மக்கள் பயன்படுத்த முடியாவில்லை. இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர், சம்பந்தபட்ட மத்திய அரசு துறைகளுடன் பேசி எந்தவித சேதாரமுமின்றி முழுமையாக பெற்று கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
கூட்டத்தில் பேசிய துணை முதல்வர், DNT மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நான் உறுதுணையாக இருப்பேன் என்றும், மத்திய அரசின் சலுகைகள் அனைத்தும் உடனடியாக பெற்று தரப்படும் என்றார். மேலும், தானும், அமைச்சர் பெருமக்களும் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளில், DNT போராளிகள் திடீர்,திடீர் என்று போராட்டங்கள் நடத்துவது அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை குறைத்துவிடுவதாகவும், இனிமேலாவது அதனை கைவிட வேண்டும் என்று DNT போராளி திருமதி.தவணிதேவியிடம் நகச்சுவையாக குறிப்பிட்டார்.
இதுகுறித்த சட்டநுணுக்கங்களை ஆராய்ந்து, அதிகாரிகளுகளுடன் பேசுவதற்கு நாளை DNT தரப்பு சட்ட வல்லுனர்கள் சென்னை வரவுள்ளனர்.