கோட்டையிலே நம் குரல் ஒலிக்கச்செய்வோம்! அணிதிரண்டு வாரீர்... வாரீர்...- விடுதலைக்களம் அழைப்பு.
தமிழகம் முழுதும் வாழக்கூடிய 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் உரிமைக்களுக்காக தொடர்போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் உன்னத இயக்கமாம் விடுதலைக்களம் சார்பில், நிறுவனத்தலைவர். இனமான போராளி, திரு.கொ.நாகராஜன் தலைமையில், "தொட்டிய நாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநில மாநாடு" பிப்ரவரி திங்கள், ஞாயிற்றுக்கிழமை (28-02-2021), மாலை 3 மணி அளவில், ஈரோடு மாவட்டம், அந்தியூர், ஸ்ரீவாரி மஹால் பின்புறமுள்ள மணி சேம்பரில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
வருகிற மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், இராஜகம்பளத்தார்களின் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்திட, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கம்பளத்தாரின் வெற்றிக் கொடி பரந்திட, ஒட்டு மொத்த அரசியல் பார்வையும், கம்பளத்தாரை திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில், சமுதாயம் இதுவரை கண்டிராத மிக பிரம்மாண்டமான வகையில் மாபெரும் அரசியல் திருப்புமுனை மாநில மாநாடாக நடைபெற இருக்கிறது.
கடந்த பத்து வருடங்களாக தமிழக சட்டமன்றத்தில் நம்முடைய இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் குரல் ஒலிக்க முடியாத சூழ்நிலையை மாற்றும் விதமாகவும், சுதந்திர இந்தியாவில் திரு.க.சுப்பு, திரு.சுந்தரராஜன், திரு.ஆர்.வரதராஜன் ஆகியோர்களுக்கு பிறகு சட்டமன்றத்தில் நமக்காக யாருமே இல்லையே என்கிற அவல நிலையை மாற்றும் விதமாகவும் இம்மாநாடு அமையவிருக்கிறது.
எனவே, தமிழகம் முழுதும் பற்றிப் படர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் பரவி வாழ்ந்து வருகிற 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாய சொந்தங்களே அனைவரும் குடும்பத்தோடு அலைகடலென திரண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி அந்தியூர் நோக்கி வாரீர்! வாரீர்! என அன்போடு அழைக்கிறோம்.
இன்றைய நம் எழுச்சியே! நாளைய நம் மக்களின் வளர்ச்சி!
நம் இலக்கு ஒன்றுதான்! அது நம் இனத்தின் வெற்றி!
நன்றி.
தகவல் உதவி:
விடுதலைக்களம்,
மாநாட்டுக்குழு.