கொங்குநாட்டு கொற்றவன் கீர்த்தி வீரர் எத்திலப்ப நாயக்கர் பிறந்தநாள் விழா!
வீர பராக்கிரம செயல்களை செய்து, வெற்றிகளை ஈட்டும் சத்திரிய புருஷர்களுக்கு பெரும்பாலும் மாவீரன் என்ற சொல்லாடலே பயன்படுத்துவது நம் முன்னோர்கள் வழி வழியாக போற்றி வந்த மரபு. ஆனால் நம் குல நாயகனான எத்தலப்ப நாயக்கருக்கு கீர்த்திவீரன் என்ற பெயர் வரக்காரணம்? சுதேசி உணர்வுக்காகவும், கப்பம் கட்டும் அடிமை முறையை அறுத்தெரியவும், பரம்பரையாக வாழ்ந்துவரும் மண்ணில் அந்நியன் (ஆங்கிலேயன்) அதிகாரம் செய்வதையும், தன் இனமான சகபாளையக்காரர்களை உயிர்ச்சேதம் செய்த, சர்வ வல்லமை பொருந்திய ஆங்கிலேய அரச பிரதிநிதியாக, தூது வந்த வெள்ளையனை தூக்கிலிட்டு எதிர்ப்பு தெரிவித்த பாளையக்காரர் என்பதாலும், வீரம், விவேகம், மதியுகம் நிறைந்த தந்திரப்போர்முறைகளில் ஒப்பாரும் மீப்பாரும் இல்லை என்ற சொல்லாடலுக்கு இணங்க வாழ்ந்தவர் என்ற காரணங்களுக்காகவே கீர்த்திவீரர் என்ற சிறப்பு வாய்ந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி' 12 -இல், உடுமலை அருகேயுள்ள தளி-திருமூர்த்திமலையில், கொங்குநாட்டு கொற்றவன் கீர்த்தி வீரர் எத்திலப்ப நாயக்கர் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படயுள்ளது. அனைவரும் வருக!! அவர் ஆசி பெறுக!!
தகவல் உதவி:
கம்பள விருட்சம் அறக்கட்டளை,
உடுமலை.