🔴 LIVE | முப்பெரும் விழா 2023


2-கோடி மக்களின் DNT-ஒற்றைச்சான்றிதழ் கோரிக்கை:பாராமுகம் காட்டும் தமிழக அரசு.

தமிழகத்தில் வாழும் 68 சாதிகளைச்சேர்ந்த 2-கோடி DNT-மக்களுக்கு DNC/DNT என்று இரட்டை சான்றிதழ் வழங்காமல் DNT என்று ஒற்றைச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும், கடந்த 08.10.2020-இல் மத்திய அரசு சொந்த நிதியை ஒதுக்கி DNT மக்கள்தொகை, சமூக-பொருளாதார புள்ளிவிபர கணக்கெடுப்பை 31.12.2021-க்குள் முடித்திட உத்தரவிட்டும், அதை மாநில அரசு காதில்கூட போட்டுக்கொள்ளாத நிலையில், சீர்மரபினர் நலச்சங்கம் கடந்த செப்டம்பர்'2020 முதல் பல்வேறு தொடர்போராட்டங்களை நடத்திவருகிறது.


கடந்த 04.02.2021-அன்று துணைமுதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், 1979-இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 1310-யை முழுமையாக இரத்து செய்து ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள சட்டசிக்கல்களை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பொழுது சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில் அப்படியெந்த சட்டசிக்கல்களுமில்லை என்று தெரிவித்தநிலையில், டெல்லி சட்டநிபுணர்களுடன் கலந்துபேச துணைமுதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்றே டெல்லியிலிருந்து வந்த சட்டநிபுணர் அதிகாரிகளிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். அதிகாரிகள் சமாதானம் ஆனாலும்கூட அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திவருகிறது.


ஆளும் கட்சி வரும் சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சியை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டுவதால், அக்கட்சியின் தலைவர் சீர்மரபினர் மக்களின் கணக்கெடுப்பை நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அறிக்கை விட்டதின் அடிப்படையில் 2-கோடி மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை தடுப்பதற்கு துணைபோய் வருகிறது.



இன்றும் தமிழக அமைச்சர்களை சந்த்தித்து தங்கள் கோரிக்கைகளையும், நியாயங்களையும் வலியுறுத்தி வரும் சீர்மரபினர் நலசங்கத்தின் நிர்வாகிகள், அரசின் பதிலுக்காக காத்துக் கிடக்கின்றனர். வன்முறையில் இறங்கி போராடுபவர்களை ஒருசில மணி நேரத்தில் அழைத்துப்பேசும் அரசு, DNT மக்களின் அறவழிப்போராட்டத்தையும், 2-கோடி மக்களின் வாக்கு வலிமையையும் கிள்ளுக்கீரையாக நினைப்பது வேதனை அளிக்கிறது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved