🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிக்கும் சிங்கங்கள்: அரவணைக்கும் அறக்கட்டளை!

இராஜகம்பளத்து இளம் சிங்கங்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிகரங்களைநோக்கி பறக்கத் துவங்கிவிட்டனர். ஆனால் அவர்களின் எண்ணங்களுக்கும், வண்ணங்களுக்கும் தீனிபோடமுடியாத பெற்றோர்களின் பொருளாதாரச்சூழல்.  இருந்தாலும் இருப்பதை அடமானம் வைத்தாவது குழைந்தைகளின் சாதனைப்பயணத்திற்கு தோள்கொடுத்து வருகின்றனர் பெற்றோர்கள். 

அதிகாரங்களை நோக்கி கம்பளத்தார் இனம் நகரவேண்டும் என்ற உரத்த குரல் கம்பளத்தாரிடம் ஓங்கி ஒலிக்கத்துவங்கியுள்ளது.  அவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு சமுதாய அமைப்புகளுக்கும், சமுதாய செயல்பாட்டாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது.  இதை உணரமறுப்பவர்களை காலம் உதாசீனப்படுத்துவதை பார்க்கமுடிகிறது. 

சில லட்சியங்களை நோக்கி சமுதாய அமைப்புகள் தொடங்கப்பட்டிருக்கலாம்,  ஆனால் காலமாற்றத்திற்கேற்ப திருத்தம் செய்துகொள்ளாத அமைப்புகள் செத்துமடிவதைத் தவிர மாற்றுவழியில்லை. 

அந்தவகையில், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, தனது லட்சியப் பயணத்தை தொடர்ந்துவந்தாலும், மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதற்கும் நெம்புகோளாக இருப்பதை கண்கூடாக பார்க்கின்றோம். 

கம்பளத்தார் சமுதாயம் சார்ந்த பிரச்சினைகள், சாதி சான்றிதழ், இடஒதுக்கீடு,  கல்வி உதவி, திருமண தகவல் என எதுவாக இருந்தாலும் அங்கே கரம் நீட்ட வருவதில் நாமக்கல் அறக்கட்டளையின் செயல்பாடு அபரீதமானது. 

அழைக்கப்பட்டவுடன் அரைமணித்துளிகளில் ஆர்ப்பரித்து வரும் சமுதாய ஆர்வலர்கள் அதிகம் உள்ள அறக்கட்டளை, அறம் சார்ந்து இயங்குவதில் தரம் உயர்ந்து நிற்கிறது. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில், நீட் தேர்வில் வென்று மருத்துவ இடம் பெற்ற சாமானியன் வீட்டுப்பிள்ளைகளாய்,  அரசு பள்ளியில் படித்து,  மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற மாணவி R.ஹேமவர்சினிக்கும், சென்னை M.M.C அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற மாணவன் K.பூபதிக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.


மேலும், வெறும்காலில் தார்ச்சாலைகளில் ஓடி பயிற்சிபெற்று,  இன்று கோவாவில் நடைபெற்ற 
தேசிய அளவிலான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற பஞ்சாலை கூலித்தொழிலாளியின் பிள்ளை நாமகிரிப்பேட்டை ,  R. புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-வது படித்துவரும் M.சந்துரு-வுக்கு பாராட்டும், பணமுடிப்பும்  வழங்கி மகிழ்ந்தனர்.

நேற்று (07.02.21) மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக டி.எஸ்.பி. கிருஷ்ணன் அவர்களும்,  தொழிலதிபர்கள் திரு. மாதையன், திரு.அன்பழகன், அன்னை திரு.தங்கவேல் மற்றும் வழக்கறிஞர்கள் திரு.B பழனிசாமி, திரு.சதிஷ் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவச்செல்வங்களை பாராட்டிப் பேசினர்.

மேலும், இவ்விழாவில் அறக்கட்டளை தலைவர் திரு. பழனிசாமி, செயலாளர் திரு.துரைசாமி, பொருளாளர் திரு. சின்னசாமி,  தலைமையிடச் செயலாளர் திரு.மணி அமைப்புச் செலாளர் திரு.சரவணன், விழா ஏற்பாட்டாளர் திரு. மனோகரன் மற்றும் சங்க உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு மாணவச்செல்வங்களை வாழ்த்தினர். 

இவ்விழாவில்,  பதவி உயர்வு பெற்ற திரு. கோவிந்தராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved