DNT-யினருக்கு ஒற்றை சான்றிதழ் வழங்குக: தமிழக அரசுக்கு தேசிய DNT ஆணையம் வலியுறுத்தல்:
தமிழகத்தில் வாழும் 2-கோடி DNT மக்களுக்கு ஒரே சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என்று தேசிய சீர்மரபினர் பழங்குடி ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய தேசிய ஆணையத்தின் தலைவர் திரு.பிகுராம்ஜி இதாதே, தமிழக அரசின் தலைமைச்செயலாளருக்கு எழுதியுள்ள கடித்தத்தில்,1952-இல் குற்றப்பழங்குடி சட்டம் விளக்கிக்கொள்ளப்பட்டபிறகு, மத்திய,மாநில அரசுகளில் இம்மக்கள் DNT என்றே குறிப்பிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.ஆனால் தமிழக அரசு 30.07.1979-இல் பிறப்பித்த அரசாணை 1310-இன் படி, DNT-சமுதாயத்தினர் DNC என்று பெயரியல் மாற்றம் செய்து அழைக்கப்படுவர் என்று பிறப்பித்த உத்தரவால், மத்திய அரசு பழங்குடியினருக்கு வழங்கப்படும் கல்வி உதவி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது தலைமையில் இயங்கிவரும் இரண்டாவது தேசிய சீர்மரனபின பழங்குடி ஆணையத்தின் கவனத்திற்கு 2018-இல் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இதனடிப்படையில் அரசாணை 1310/30.07.1979-யை திரும்பப்பெறுவது குறித்து பரிசீலனை செய்த மாநில அரசு, அரசாணை 26/08.03.2019 மூலம் பெயர் மாற்றம் செய்துள்ளது. இதன்படி DNT பிரிவினருக்கு மாநில அரசின் பயன்பாட்டிற்கு DNC எனவும், மத்திய அரசின் பயன்பாட்டிற்கு DNT என இரட்டை சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் இந்த இரட்டைச்சான்றிதழ் வழங்கும் முறையால் எவ்வித பலனும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காடி தமிழகத்தில் வாழும் சீரமரபின பழங்குடி மக்கள் தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு கடந்த 10.02.2021 அன்று கொண்டு வந்துள்ளனர்.
இதை ஆராய்ந்து சீர்தூக்கி பார்த்த தேசிய ஆணையம், இம்மக்களின் ஒற்றைச்சான்றிதழ் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அரசு உத்தரவின் மூலமே இவர்களுக்கு மீண்டும் DNT -என்றே சான்றிழ் வழங்கிட முடியும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மாநில அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான விளக்கம் சட்டம் 45/1994 யை திருத்தாமல் பல்வேறு திருத்தங்களை அரசாணை மூலமே மாநில அரசு செய்துள்ளதையும், இதன் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் அக்கடித்ததில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒற்றை DNT சான்றிதழ் மூலம் மட்டுமே மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை 2021-22-இல் சீர்மரபின பழங்குயினரை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தி, வளர்ச்சியடையச்செய்ய (SEED) திட்டத்தின் பலன்களை அனுபவிக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தி இம்மக்களின் கோரிக்கையான ஒற்றைச்சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.