விருப்பாச்சி கோபால நாயக்கர் சிலைக்கு திரு.உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று (12.02.21) வருகை தந்த திமுக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், "தீபகற்ப கூட்டணி" அமைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட விருப்பாச்சியிலுள்ள கோபால நாயக்கர் மணிமண்டபத்திற்கு வருகை புரிந்தார். அங்குள்ள விருப்பாச்சி கோபால நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திண்டுக்கல் திமுக மாவட்டச்செயலாளர் திரு.பெரியசாமி மற்றும் திமுக சட்டமன்ற கொறடா திரு.சக்கரபாணி ஆகியோர் வந்திருந்தனர். இநிகழ்ச்சியில் விருப்பாச்சி கோபால நாய்க்கர் வம்சாவளியை சேர்ந்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
தகவல் உதவி.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்,
நத்தம்.