மறைந்த மாமனிதர் அ.சங்கையா நாயக்கருக்கு திரு.துரை வைகோ புகழாரம்!

இராஜகம்பள மகாஜனசங்கத்தின் பொருளாளர் மறைந்த திரு.சங்கையா நாயக்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு திரு.துரை வைகோ மலரஞ்சலி செலுத்தியபின் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி.
புதுதில்லியில் கழகத்திற்கு அரணாகத் திகழும் அம்மாநில அமைப்பாளர் அன்புச்சகோதரர் பழநிகுமார் அவர்களின் அருமைத் தந்தையார் திரு.சங்கைய நாயக்கர் கடந்த பிப்ரவரி 8-இல் காலமானார்.
விருதுநகரில் உள்ள அன்னார் இல்லம் சென்று அவரது படத்திற்கு மரியாதை செலுத்தி பழநிகுமார் அவர்களுக்கும், அவர் தம் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினேன்.
உரிமைகள் மறுக்கப்பட்ட இராஜகம்பளத்தார் சமூக மக்களின் விடியலுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட பெருந்தகை அவர். அச்சமூக மக்களின் பேரன்பிற்கு உரியவராக திகழ்ந்தவர்.
நமது தலைவர் சிவகாசி, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்ட காலங்களில் இவரின் இல்லத்திற்கு நான் நேரில் சென்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்து ஆதரவு கோரிய போதெல்லாம் என்னை அன்பு முகம் காட்டி வரவேற்று பாசத்தை வெளிப்படுத்திய பண்பாளர் .
அவரது புதல்வர் பழநிகுமார் தலைவரையும், கழகத்தையும் உயிராக நேசிக்கும் உண்மைத் தொண்டர். எம்.பி. இல்லாத காலங்களில் தலைவர் தில்லி வரும் போதெல்லாம் இவரது விடுதியில் தங்க வைத்து நன்கு உபசரிப்பார். தமிழகத்தில் இருந்து வரும் மக்களுக்கு தம்மால் இயன்ற வகையில் வழிகாட்டி உதவுகிறார்.
இத்தகைய பெருமைக்குரிய பழநிகுமாரின் தந்தையார் மறைவு நல்லதொரு கழக குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு ஆகும். அவர்களது துயரில் பங்கேற்கிறேன் .
அய்யா அவர்களின் நற்பெயர் துலங்கட்டும் நமது மண்ணில்...