உசிலம்பட்டியில் தொட்டிய நாயக்கர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழகத்தில் வசித்துவரும் 2-கோடி சீர்மரபினபழங்குடி மக்களுக்கு DNT-என ஒற்றைச்சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இதனையடுத்து துணைமுதல்வர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்பில் ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதில் உள்ள சட்ட சிக்கல்களையும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டினர்.
ஆனால் DNT-தரப்பில் ஆஜரான சட்ட ஆலோசகர், DNT-சான்றிதழ் வழங்குவதால் சட்டரீதியான சிக்கல்களோ, நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கையோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெளிவாக விளக்கினார். அதன்பின்பும் மேற்கொண்டு காலதாமதத்திற்கு உரிய காரணங்களை சொல்ல முடியாத அரசு தரப்பு, இழுத்தடிப்பு செய்துவருகிறது. அரசின் இந்தமெத்தனப்போக்கை கண்டித்து உசிலம்பட்டியில் சீர்மரபினர் நலசங்கத்தினர் இன்று காலை முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் தொட்டிய நாயக்கர்கள் சார்பில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் நலசங்கத்தின் சார்பில் அதன் தலைவர் திரு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலிருந்து திரு.செல்லப்பாண்டியன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.