தோள் உயர்த்தும் மறவர் கூட்டம்! தூங்கி வழியும் கம்பளத்தார் கூட்டம்!
ஆளும் கட்சியான அதிமுக வரும் சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்பதற்கான தேர்தல் வியூகத்தின் அடிப்படையில், தமிழகத்தின் மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,கருணாநிதி போன்றோர் செய்யத்துணியாத படுபாதகச்செயலை செய்துள்ளது. MBC பிரிவில் இடம்பெற்றுள்ள 108 சாதிகளில் ஒருசாதிக்கு மட்டும் 10.50% உள்ஒதுக்கீடு வழங்கி, மீதமுள்ள 107 சமுதாயங்களின் கல்வி,வேலைவாய்ப்பு உரிமைகளை பறித்து 2கோடிக்கும் மேற்பட்ட மக்களை படுகுழியில் தள்ளியுள்ளது தமிழக அரசு.
இதில் ஒரு விநோதம் என்னவெனில், இந்த உள்ஒதுக்கீட்டினால் கல்வி,வேலைவாய்ப்பு உரிமைகள் பறிக்கப்படும் சமுதாயங்களான தொட்டிய நாயக்கர், பிரன்மலைக்கள்ளர், மறவர், முத்தரையர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர், போயர், ஒட்டர் போன்ற சமூகங்களின் பெரும்பான்மையினர் காலம்காலமாக அஇஅதிமுக வின் நிரந்தர வாக்கு வங்கிகளாக இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், அதிமுக தன் ஓட்டு வங்கியின் சமுதாய நலன்களை புறந்தள்ளிவிட்டு கூட்டணிக்கட்சியின் அழுத்தத்திற்கு பணிந்துபற்றி அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
அதில் விமர்சகர்கள் பிரதானமாக குறிப்பிடுவது, இடஒதுக்கீடு குறித்தான அறிவும்,தெளிவும் உள்ஒதுக்கீடு பெற்றுள்ள சமுதாயம் அறிந்துள்ள அளவு இடஒதுக்கீடு பறிக்கப்பட்ட 107 சமுதாயங்கள் அறிந்துகொள்ளவில்லை என்பது தான். இந்த 107 சமுதாயத்தில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பத்துக்கும் மேற்பட்ட சாதிய அமைப்புகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், இடஒதுக்கீட்டால் பலன்பெற்று வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என இருந்தும், ஒருசில சமூகங்கள் தவிர்த்து மற்றசமூகங்கள் இடஒதுக்கீடு குறித்தான விழிப்புணர்வு பெற்றிருக்கவில்லை என்பதும், சமுதாய அமைப்புகளிடமே இடஒதுக்கீடு குறித்தான புரிதல் இல்லை என்பதுதான் எதார்த்தநிலையாக உள்ளது. சமுதாய அமைப்புகளும், தலைவர்களும் வலுவிழந்துள்ளதை பயன்படுத்திக்கொண்டுள்ள அரசியல் கட்சிகள் இச்சமுதாய மக்களின் வாக்குகளை விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்ததே காரணமாக இருக்கலாம் என்று கூறுனார்.
ஆளும்கட்சியின் இந்த எண்ணத்தில் மண்ணள்ளிப்போடும் வகையில், எதிர்பாராதா திருப்பமாக தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக தென்மாவட்டங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளது. இன்று (02.02.2021) உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர, முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் உள் ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளோ, அரசியல் கட்சித் தலைவர்களோ, கல்வியாளர்களோ இதுகுறித்து பேசாமல் மௌனம் காத்துவருவது வருங்கால சந்ததிகளுக்கு எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.