DNT தொட்டிய நாயக்கர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக! திமுக-விடம் மனு!

தமிழக அரசு சமீபத்தில் 108 சாதிகளை உள்ளடக்கிய MBC பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20% இடஒதுக்கீட்டில், ஒருசாதிக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கி தொட்டியநாயக்கர் உள்ளிட்ட மற்ற 107 சாதியினரின் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டது. இந்த உள் ஒதுக்கீட்டிற்கெதிராக தென்மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தும், மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இச்சட்டத்திற்கு எதிராக உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர்.
பல்வேறு வகைகளில் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் அதேவேளையில், தங்கள் கோரிக்கையை வெற்றிபெறச்செய்ய அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் DNT சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகளை அணுகி தங்களுக்கு ஆதரவை திரட்டி வருகின்றனர். நேற்று (03.03.2021) மாலை சென்னையில் திமுக முன்னனித்தலைவர்களில் ஒருவரான திரு.தங்கதமிழ்ச்செல்வன் அவர்களை சீர்மரபினர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து, திமுக தேர்தல் அறிக்கையில் சீர்மரபினரின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக உறுதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.