🔴 LIVE | முப்பெரும் விழா 2023


DNT-தொட்டியநாயக்கர் இடஒதுக்கீடு மறுப்பு!-விஸ்வரூபம் எடுக்கும் போராட்டங்கள்!

MBC பட்டியலிலுள்ள 108 சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20% இடஒதுக்கீட்டில், ஒரு சாதிக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கியதால் பிற 107 சாதியினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். 2கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தொட்டிய நாயக்கர், மறவர்,கள்ளர், முத்தரையர் உள்ளிட்ட 68 DNT சமுதாயத்தினர் இந்த இடஒதுக்கீட்டால் கடுமையாக பாதிப்படைய வாய்ப்புள்ளது.

ஏற்கனவே 1979-இல் அதிமுக அரசால் DNT என்ற பிரிவு நீக்கப்பட்டு DNC என்று மாற்றியதால் மத்திய அரசின் பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் DNT சான்றிதழ் வழங்கவேண்டும் என்று சீர்மரபின பழங்குடியைச்சேர்ந்த 68 சாதியினர் 2014-முதல் போராடி வந்த நிலையில், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், பழிதீர்க்கும் வகையில் DNT பட்டியலிலுள்ள 68 சாதிகளுடன் மேலும் 25 சாதிகளை இணைத்து 7% உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது தமிழக அரசு. இதனை எதிர்த்து கம்பம்,தேனி, மதுரை போன்ற தென்மாவட்டங்களில் பல்வேறு வடிவிலான போராட்டங்களை சீர்மரபினர் நலசங்கத்தினர் கையில் எடுத்து போராடி வருகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved