🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தடகள வீரருக்கு உதவிக்கரம் நீட்டினார் திரு.இராமமோகன் ராவ்!

தேசிய அளவில் 1500 மீட்டர் தடகளப்போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற நாமகிரிப்பேட்டை மாணவன் சந்துரு நேபாள நாட்டில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்ள ஆயத்தமாகி வருகிறார். சாதாரண கூலித்தொழிலாளியின் மகனான சந்துரு சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடிய தரமான பயிற்சி, பயிற்சியாளர், உடற்பயிற்சியாளர், மருத்துவர், உபகரணங்கள் ஏதுமின்றி தத்தளித்து வருகிறார். மாணவன் சந்துரு-வின் பேட்டி thottianaicker.com Youtube சேனலில் ஒளிபரப்பானது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் உதவ முன்வந்தனர். விடுதலைக்களம் திரு.கொ.நாகராஜன் ஏற்பாட்டில் கடந்த மாதம் சிவகாசியில் நடைபெற்ற சமுதாயக்கூட்டமொன்றில் பங்கேற்க வந்திருந்த தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலாளர் திரு.இராமமோகன் ராவ் அவர்களிடன் அறிமுகம் செய்துவைத்தார்.

அந்தக்கூட்டத்திலேயே மாணவன் சந்துரு-வை பாராட்டிபேசிய திரு.இராமமோகன் ராவ் அவர்கள், இதுபோல தெலுங்கு சமுதாயத்திலுள்ள திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு ஊக்கமும், உற்சாகமும் படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டவர், மாணவன் சந்துரு மேலும் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்துகொள்ள அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

அதனையடுத்து கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின் நேற்று முன்தினம் சென்னை திரும்பியவர் உடனடியாக மாணவன் சந்துருவை சென்னைக்கு அழைத்து மார்ச் 15-இல் நேபாள நாட்டில் பங்கேற்பதற்கு ஏதுவாக தேவையான நிதியுதவியை அளித்தார். மாணவன் சந்துருவை நாமகிரிப்பேட்டையிலிருந்து விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் சென்னைக்கு அழைத்துச்சென்று நிதியுதவி பெறுவதற்கு உதவிகரமாக இருந்தார்.

மாணவன் சந்துரு நேபாள நாட்டில் சாதித்து வெற்றியுடன் தாயகம் திரும்ப வாழ்த்துகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved