அந்தியூரில் பாஜக வேட்பாளராக போட்டியிட கம்பளத்தார் விருப்பமனு!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத்தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக சத்தியமங்கலம் தெற்கு மண்டல் பொருளாதாரப்பிரிவு மாவட்டச் செயலாளரான திரு.விஜயகுமார் அவர்கள், தமிழக பாரதிய ஜனதா பொறுப்பாளர் திரு சி.டி.இரவியிடம் வழங்கினார்.
ஊராட்சி மன்ற அளவில் இதுவரை அரசியல் செய்துவந்த கம்பளத்தார் சமுதாயத்திலிருந்து இந்த சட்டமன்றத்தேர்தலில் தான் அதிகப்படியானோர் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இம்முயற்சியில் கம்பளத்தார்கள் வெற்றிபெற முடியாமல் போகலாம், ஆனால் நிச்சயம் 2026- சட்டமன்றத்தேர்தலில் கம்பளத்தார்களை புறக்கணித்துவிட்டு எந்தக்கட்சியும் தேர்தல் களத்தில் வெற்றிபெற முடியாது என்பதை உணரும் நிலை வரும்.
தகவல் உதவி:
திரு.விஜய்