இடஒதுக்கீடு அரசாணையை திரும்பப்பெருக! - தேனி மாவட்ட த.வீ.க.ப.கழகம் கோரிக்கை

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (08.03.2021) மாலை 3 மணியளவில் ஆண்டிபட்டியில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் திரு.லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் திரு.R.சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தமிழக அரசு அண்மையில் நிறைவேற்றிய வன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீட்டால், MBC பட்டியலிலுள்ள 115 பிற சமூகங்கள் கடுமையாக பாதிக்கப்படுவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே அரசியலிலும், அரசு பதவிகளிலும் தொட்டிய நாயக்கர் சமூகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வரும்நிலையில், கல்வி மட்டுமே சமூகம் முன்னேற இருந்த ஒரே வழி. தற்பொழுது அதற்கும் ஆபத்து வந்த சூழல் குறித்து கூட்டத்தில் பேசியோர் விரிவாக விளக்கினர். இறுதியாக கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் உள்ஒதுக்கீடு அரசாணை எண் 8/2021 ஐ திரும்பப்பெறவேண்டும். உள்ஒதுக்கீடுக்கெதிராக மாவட்டம் முழுவதும் வால்போஸ்டர் ஒட்டுவது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தகவல் உதவி:
திரு.ஆர்.சக்திவேல். மாவட்டச்செயலாள்.