🔴 LIVE | முப்பெரும் விழா 2023


துணைமுதல்வரை எதிர்த்து களமிறங்கும் கம்பளத்தார்!

தமிழக துணைமுதல்வர் மண்புமிகு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்றாவது முறையாகவும் அதே தொகுதியில் களமிறங்க உள்ளார். அவரை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் தேனி தெற்கு மாவட்டச்செயலாளர் திரு.M.முத்துசாமி அவர்கள் களமிறங்குகிறார். 

இருதிராவிட இயக்கங்கள் கம்பளத்தார்களை புறக்கணித்துவிட்ட நிலையில் அமமுக கம்பளத்தார் ஒருவருக்கு வாய்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை கம்பளத்தாருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்ற மனக்குமுறலை வெளிப்படுத்தி வந்த உறவுகள் தற்பொழுது திரு.முத்துசாமி அவர்கள் வேட்பாளராக களமிறங்குவதால், அவரை வெற்றிபெறச்செய்ய இக்கணம் முதல் களப்பணியாற்றிட வேண்டும்.

ஏற்கனவே துணைமுதல்வருக்கெதிராக DNT சமுதாய மக்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், போடிநாயக்கனூர் பகுதியில் மிக அதிகப்படியான கம்பளத்தார்கள் மற்றும் அனுப்ப கவுண்டர்களும் இருப்பதால், அதனுடன் நமது DNT உறவுகளான பிறன்மலைக்கள்ளர், மறவர் வாக்குகளும் இணையும் பட்சத்தில் திரு.முத்துசாமி அவர்களின்  வெற்றியை எளிதாக்கலாம். மலையை தகர்க்கும் சக்தி கம்பளத்தாருக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் காலம் கனிந்துள்ளது. ஒற்றைத் தொகுதி என்றாலும் ஸ்டார் வேட்பாளராகும் வாய்ப்பு கிடைத்திருப்பதை சமுதாயம் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved