போடிநாயக்கனூர் வெற்றி வேட்பாளர் அறிமுகம்!
திரு.மு.முத்துசாமி அவர்கள் 01.06.1958-இல் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள பூலானந்தபுரம் கிராமத்தில் திரு.முத்துசாமி நாயக்கர் - திருமதி.பெருமாளம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். பள்ளி இறுதியாண்டுவரை படித்துள்ள திரு.முத்துசாமி அவர்களுக்கு, நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவருக்கு திருமணமாகி திருமதி.பெருமாளம்மாள் என்ற மனைவியும், L. நிவேதா - B. Tech (IT) , S. சிவரஞ்சனி - M.S.W என்ற இருமகள்களும் உள்ளனர்.
பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவரான திரு.முத்துசாமி அவர்கள், சிறுவயதிலிருந்தே எம்ஜிஆரின் தீவிர ரசிகராக, அஇஅதிமுக-வின் பால் ஈடுபாடுகொண்டு அரசியலில் ஈடுபடத்தொடங்கினார். 10 ஆண்டுகாலம் பூலானந்தபுரம் கிளைக்கழக செயலாளராகவும், 20 ஆண்டுகாலம் பூலானந்தபுரம் ஊராட்சி மன்றத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.தேனி மாவட்ட வேளாண் விற்பனைக்குழுவின் தலைவராக பதவிவகித்த அனுபவமிக்கவர். திரு.தினகரன் அவர்கள் அமமுக-வைத் தொடங்கும்வரை 25-ஆண்டுகள் சின்னமனூர் ஒன்றியக்கழக செயலாளராக அதிமுகவில் பொறுப்புவகித்தவர். தற்பொழுது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
பெரியகுளம் வட்டார முக்கிய அதிமுக பிரமுகரும்,சிந்துவம்பட்டி நாட்டமையுமான திரு.பெருமாள் நாயக்கர் அவர்களின் மருமகன் என்றவகையில் சமுதாயத்திலும், அரசியல் வட்டத்திலும் கூடுதல் அறிமுகமும், செல்வாக்கும் பெற்றவர். சிந்துவம்பட்டி கிராமம் வி.ஐ.பி தொகுதியாக ஆண்டிபட்டி தொகுதியில் இருந்தபடியால் அங்கு வேட்பாளர்களாக போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அறிமுகம், அன்பு, நன்மதிப்பையும் பெற்றது நாட்டாமை அவர்களின் குடும்பம். அந்தவகையில் திரு.முத்துச்சமி அவர்களின் மனைவி திருமதி. பெருமாளம்மாள் அவர்களும் அரசியல் பின்புலமுள்ள முழுநேர அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி. பெருமாளம்மாள் அவர்கள், அதிமுக தேனி மாவட்ட துணைச்செயலாளரகவும்,தேனி மாவட்ட மகளிரணி செயலாளராகவும் 10 ஆண்டுகள் பதவி வகித்த அனுபவமிக்கவர். மேலும் மாவட்ட கவுன்சிலராக 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
தற்பொழுது போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் தன்னை எதிர்த்து போட்டியிடும் துணைமுதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பெரியகுளம், போடிநாயக்கனூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டபொழுது அவருக்காக தீவிர பிரச்சரம் செய்தவரான திரு.முத்துசாமி அவர்கள், தற்பொழுது திமுக சார்பில் போட்டியிடும் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்கள் ஆண்டிப்பட்டி சட்டமன்றத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டபொழுதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் தேனி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபொழுதும் தீவிர களப்பணியாற்றியதின் மூலம் போட்டி வேட்பாளர் இருவரின் நன்மதிப்பைப் பெற்றவர். தவிர அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.TTV.தினகரன் தேனி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபொழுது அவருக்காக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு அவரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர். திரு.TTV அவர்களின் நம்பிக்கையைப்பெற்ற தீவிர விசுவாசியான திரு.முத்துசாமி அவர்கள் மட்டும் தான் கம்பளத்தார் சமுதாயத்தில் பிரதான கட்சி ஒன்றில் மாவட்டச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஒரே தலைவர் என்பது கூடுதல் சிறப்பு.
கம்பளத்தாருக்கு அந்த சிறப்பை வழங்கிய திரு.TTV அவர்களே தற்பொழுது நடைபெறும் சட்டமன்றத்தேர்தலிலும் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக சட்டமன்றத்தேர்தலில் களமிறங்கும் திரு.முத்துசாமி அவர்கள், கடந்த காலங்களில் யாருக்காக தேர்தல் பணியாற்றி வெற்றிவாகை சூட்டினாரோ, அந்த சக நண்பர்களுடனே எதிரும்,புதிருமாக களமிறங்குவது இயற்கையின் விநோதம். இருபெறும் மலைகளுடன் மோதும் எளிமையானவரான திரு.முத்துசாமி அவர்கள், தன்னோடு மோதும் இருவருக்கும் தேர்தல் பணியாற்றியவர் என்ற தகுதியின் அடிப்படையிலும், நியாய, தர்மத்தின் அடிப்படையிலும், உழைப்பிற்கேற்ற பலனை இயற்கை இந்த தேர்தலில் அவருக்கு வெற்றிமாலையை சூட்டும் என்பது நிச்சயம்.
சமுதாயத்திற்கு சட்டமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு இல்லையே, அரசியல் அங்கீகாரம் இல்லையே என்று ஏங்கித்தவிக்கும் இளைஞர்களும், சமுதாய ஆர்வலர்கள், நலம்விரும்பிகள், இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி தேர்தல் களத்திலும், சமூக ஊடகங்களிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு ஒவ்வொரு வாக்காக சிந்தாமல், சிதறாமல் திரு.முத்துசாமி அவர்களுக்கு வெற்றிச்சின்னமாம் "குக்கர்" சின்னத்திற்கு பெற்றுத்தர வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
திரு.முத்துசாமி அவர்களுக்கு போடிநாயக்கனூர் தொகுதில் களப்பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் 7393988767 என்ற வாட்ஸப் எண்ணில் தொடர்புகொள்ளவும். வேட்புமனு பரிசீலனை முடிந்து மார்ச்-22 க்குப்பின் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்ள ஒருங்கிணைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. களம் காண்போம்! வெற்றி நிச்சயம்!