இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! உங்கள் சின்னம் கிரிக்கெட் பேட்ஸ்மேன்!
வருகிற சட்டமன்றத்தேர்தலில் விடுதலைக்களம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. முதல் பட்டியலில் இடம்பெற்ற அந்தியூர், பவானி சட்டமன்றத்தொகுதிகளுடன், இன்று வெளியான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலின்படி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் சட்டமன்றத்தொகுதியில் காந்தியவாதி திரு.T.இரமேஷ் அவர்களும், திருச்செங்கோடு சட்டமன்றத்தேர்தலில் திரு.K.N.செங்கோட்டுவேல் அவர்களும் விடுதலைக் களத்தின் போட்டியிடுவர் என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதலைக்களம் சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் "கிரிக்கெட் பேட்ஸ்மேன்" சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நமது சின்னம் "கிரிக்கெட் பேட்ஸ்மேன்" வெற்றிச்சின்னம் "கிரிக்கெட் பேட்ஸ்மேன்"