சமுதாய களப்பணியாளர்கள் தேவை!
விடுதலைக்களம், இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை, நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து DNT- சமுதாய மக்களின் பிரச்சினைகளுக்காக போராடிவருவது அனைவரும் அறிந்ததே.
தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக 68 சமுதாயங்கள் அடங்கிய சீர்மரபினர் நலச்சங்கம் (DNT) செயல்பட்டு கொண்டு வருகிறது. 2015-இல் இச்சங்கம் துவக்கப்பட்டதிலிருந்து DNT-மக்களின் பல்வேறு பிரச்சைனைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்பட்டுவருகிறது. குறிப்பாக 1979-இல் தமிழகத்தில் DNT-என்று சான்றிதழ் வழங்கப்படுவது மாற்றியமைக்கப்பட்டு DNC-என்ற சான்றிதழ் வழங்கிவருகிறது. இதன் மூலம் சீர்மரபின பழங்குடிகள் என்பது சீர்மரபின வகுப்பு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டதால் கடந்த 40-வருடங்களாக சீர்மரபின பழங்குடிகளுக்கு மத்திய அரசு கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வழங்கும் பல்வேறு சலுகைகள் கிடைக்காமல் மிகவும் பின்தங்கியுள்ளோம். இச்சங்கம் கடந்த ஆறு ஆண்டுகாலமாக போராடியதைத்தொடர்ந்து DNT யை உயிர்ப்பித்துள்ளோம். மேலும், சீர்மரபினர் நல வாரியம் அமைக்கப்பட்டு, அட்டைகளும், சலுகைகளும் பெறப்பட்டு வருகின்றன.
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஓராண்டாக பிற DNT-சமுதாயங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இருந்தபோதிலும் DNT குறித்த முழுவிழிப்புணர்வு, பயன்கள் குறித்து மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. DNT-சமுதாயங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தேசிய அளவிலும், மாநில அளவிலும் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றன. DNT-சமுதாயங்கள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு தனி நலவாரியத்துடன் இயங்குவதால், இச்சமுதாயங்களின் உரிமைகள்,கோரிக்கைகள், தேவைகள் காலமாற்றத்திற்கேற்ப தொடர்ந்து இயங்கவேண்டிய தேவையுள்ளது. தனி இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம், தொகுப்பு வீடுகள், மானியங்கள் என பல்வேறு சலுகைகளையும், உரிமைகளையும் வென்றெடுக்க தொடர்ந்து இயங்க வேண்டிய தேவையிருப்பதால், உரிமைகளுக்காக போராடுவதற்கானாலும், சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமானாலும் அல்லது சலுகைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றாலும் சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகிறது.
அந்தவகையில் சமுதாய பெரியவர்கள், கல்வியாளர்கள் வழிகாட்டுதல்படி கிளை அமைப்புகள் தொடங்கி, மாநில தேசிய அளவில் பல்வேறு படிநிலைகளில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து நீடித்த அமைப்பாக இயங்கிட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் சமுதாயப்பணியாற்றிட ஆர்வமுள்ள இளைஞர்கள், பொறுப்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்கு தேவைப்படுகின்றனர்.
இது அரசியல் சாராத அமைப்பு. எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றிட தொடர்ந்து போராடவேண்டிய தேவையோ அல்லது எதிர்க்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாலோ அதை எதிர்கொள்ளும் வகையில் நிர்வாகிகள் இருப்பது அவசியம். எனவே அரசியலில் பிரதானமாக இருப்பவர்கள் நேரடியாக நிர்வாகப்பொறுப்பேற்காமல் அவ்வப்பொழுது நடக்கும் கூட்டங்களில் கலந்துகொண்டு அலோசனைகளையும், ஆதரவினையும் வழங்கலாம். பிற அமைப்புகளில் பொறுப்புவகிப்பவர்களும் பணியாற்ற தடையேதுமில்லை.
சங்கத்திலுள்ள பொறுப்புக்கள்:
1. தலைவர்
2. துணைத்தலைவர்
3. பொதுச்செயலாளர்
4. துணை பொதுச்செயலாளர்கள்
5. இணை பொதுச்செயலாளர்
6. அமைப்புச் செயலாளர்
7. கொள்கைப்பரப்பு செயலாளர்
8. பொருளாளர்
9. மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
10. மாநில செயலாளர்கள்
11. தலைமை செயற்குழு உறுப்பினர்கள்
12. தலைமை சங்க ஆலோசகர்கள்.
13. மகளிர் அணி தலைவர்& செயலாளர்
14. இளைஞர் அணி தலைவர்& செயலாளர்
15. மாணவர் அணி தலைவர்& செயலாளர்
16. விவசாய அணி தலைவர்& செயலாளர்
17. தொழிலாளர் அணி தலைவர்& செயலாளர்
18. தொழில்முனைவோர் அணி தலைவர்& செயலாளர்
19. மருத்துவ அணி தலைவர்& செயலாளர்
20. வழ்க்கறிஞர் அணி தலைவர்& செயலாளர்
21. சமூகபாதுகாப்பு அணி தலைவர்& செயலாளர்
22. சிறுபான்மையினர் அணி தலைவர்& செயலாளர்
23. கலாச்சார அணி தலைவர்& செயலாளர்
24. ஆய்வு & திட்ட அணி தலைவர்& செயலாளர்
25. பிரச்சார அணி தலைவர்& செயலாளர்
26. செய்தி & மக்கள் தொடர்பு அணி தலைவர்& செயலாளர்
27. மாவட்ட தலைவர்&செயலாளர்&பொருளாளர்
28. தாலுகா தலைவர் &செயலாளர்&பொருளாளர்
29. ஒன்றிய தலைவர் &செயலாளர்&பொருளாளர்
30. கிளை தலைவர்&செயலாளர்&பொருளாளர்
விண்ணப்ப படிவம்
1. பெயர் : -
2. தந்தை பெயர்:-
3. சாதி/பிரிவு:-
4. கல்வி:-
5. வேலை:-
6. விலாசம்:-
7. தொடர்பு எண்:
8. மின்னஞ்சல்:-
9. வேறு சங்கங்களில் உறுப்பினரா?
10. சமூக மேம்பாட்டிற்கு உங்கள் திட்டம் என்ன?
11. எந்தப்பொறுப்பில் செயல்பட விருப்பம்?
உங்கள் விருப்பத்தை தெரிவிக்க தொடர்புகொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள்:
திரு.இராமராஜ்-9442646284
www.thottianaicker.com-7395988767
அல்லது vkrsnsgroup@gmail.com-மிலோ தெரிவிக்கலாம்.
இவண், இராஜகம்பளத்தார் OBC-DNT உரிமைமீட்பு கூட்டியக்கம், சென்னை.