தமிழக முதல்வராக பதவியேற்கவிருக்கும் தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.

ஏப்ரல்-6 ஆம் தேதி நடந்துமுடிந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி திமுக தலைவர் தளபதி.மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கும் கூட்டணி கட்சியின் சார்பாக வெற்றிபெற்றவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோல், வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கும் அதிமுக-விற்கும், அதன் தோழமை கட்சிகளின் சார்பாக வெற்றிபெற்றுள்ளவர்களுக்கும் 40 லட்சம் இராஜகம்பளத்தார் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை. www.thottianaicker.com