பெருந்துறை சட்டமன்றத்தொகுதியில் கவனத்தை ஈர்த்த கம்பளத்து வேட்பாளர்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கம்பளத்தார் சமுதாயத்தை அரசியல் கட்சிகள் புறக்கணித்ததைத் தொடர்ந்து, திருச்சுழி, வேடசந்தூர், நாமக்கல், திருச்செங்கோடு,பெருந்துறை, அந்தியூர் சட்டமன்றத் தொகுதிகளில் கம்பளத்தார் சமுதாய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பெருந்துறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரு.சங்கர்சாமி அவர்கள் 3336 வாக்குகள் பெற்று மக்கள் நீதி மையத்தின் கட்சி வேட்பாளருக்கு இணையான வாக்குகளைப்பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
எல்லாத் தொகுகளிலும் ஐந்து முனைப் போட்டி நிலவியநிலையில், பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திரு.தோப்பு வெங்கடாச்சலம் அவர்களும் களமிறங்க, அத்தொகுதியில் ஆறுமுனைப்போட்டி நிலவியது. இதில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்குநாடு தேசிய கட்சி வேட்பாளர் இரண்டாமிடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மூன்றாமிடமும், முன்னாள் அமைச்சரும் அதிமுக போட்டி வேட்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் 9895 வாக்குகள் பெற்று நான்காமிடமும், 3533 வாக்குகள் பெற்ற கமலஹாசன் அவர்களின் மக்கள் நீதிமையம் கட்சி வேட்பாளர் ஐந்தாமிடம் பெற்றார். அவரைவிட சுமார் 200 வாக்குகள் பெற்ற கம்பளத்து வேட்பாளர் திரு.சங்கர்சாமி அவர்கள், முன் கூட்டியே திட்டமிடாமல் திடீரென்று களமிறங்கியவர் பெற்ற வாக்குகள் அரசியல் கட்சியினர் மத்தியிலும், பெருந்துறை வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் 8 தபால்வாக்குகளையும் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.