தமிழகத்தின் 13-வது முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு! - கம்பளத்தார் வாழ்த்து.
தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெறும் கட்சியாக வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் 13-வது முதல்வராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மூத்த தலைவர்கள் திரு.துரைமுருகன், திரு.கே.என்.நேரு உள்ளிட்ட 33-அமைச்சர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
மிகுந்த சவால்களுக்கும், எதிர்பார்ப்புக்குமிடையே 10 ஆண்டுகளுக்கு பின்பு அரியணையேறும் திமுகழகம், சமூகநீதி, மொழி சிறுபான்மையினர் நலன், கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு ஆகிய அடிப்படை விசயங்களில் இந்தியாவிற்கு முன்மாதிரியாக திகழும் வகையில் ஆட்சி நிர்வாகத்தை வழங்கிட, தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார் சார்பில் வாழ்த்துகிறோம்.