கட்டபொம்மனை மறவாத வெற்றி வேட்பாளர்!
மதுரை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் புதூர் திரு.மு.பூமிநாதன் அவர்கள் மதுரையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு முன்புவரை மட்டுமே தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். வெற்றி பெற்ற பின் அவரவர் கட்சியின் தலைவர்களின் சிலை, சமாதி போன்றவற்றிற்க்கே அணிவகுத்துச்செல்வர். ஆனால் இதற்கு விதிவிலக்காக புதூர்.பூமிநாதன் அவர்கள் வெற்றிபெற்றவுடன் தன் ஆதரவாளர்கள் புடைசூழ கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க வருகைதந்தது அவரின் உயர்ந்த உள்ளத்தைக்காட்டியது. நீண்ட அரசியல் அனுபவமுள்ளவரான பூமிநாதன் அவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களுடன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு பத்தொன்பது மாதங்கள் சிறையில் இருந்த கொள்கை வேலம் என்பது குறிப்பிடத்தக்கது.