🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மராத்தா இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு அலசல்!

உறவினர்களுக்கு காலை வணக்கம்.

உறவினர்களே, 5.5.2021 அன்று உச்சநீதிமன்றம் மராத்தா இட ஒதுக்கீடு வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அது எல்லா மாநிலங்களிலும் இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களை நேரடியாக பாதிக்கின்ற தீர்ப்பாக இருப்பதால் நாம் அனைவரும் அதை ஓரளவாவது தெரிந்து கொள்ள வேண்டும். எனவே தீர்ப்பின் சுருக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சீர்மரபினர் நல சங்கம் முயற்சிக்கிறது.

உறவினர்களே, மகாராஷ்டிர மாநிலத்தில்  மராத்தா மக்கள் பல ஆண்டுகளாக தங்களையும் பிற்படுத்தப்பட்டோராக அறிவித்து தனியாக இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் 2014க்கு முன்பாக முன்னேறிய வகுப்பாக கருதப்பட்டு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. 2011இல் மாநில அரசாங்கம் ஆளுனர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு அவசரச் சட்டத்தின் மூலமாக மராத்தா மக்களுக்கு 16 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினார்கள். அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, நீதிமன்றம் தடை விதித்தது. உடனடியாக சட்டமன்றத்தில் வைத்து ஒரு சட்டத்தை நிறைவேற்றினர். அதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில பிற்படுத்தப்பட்ட ஆணையம் மராத்தா மக்கள் சம்பந்தமான சமூக பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் தலைவரான எம் சி ஹைக்வாட் என்பவர் அந்த அறிக்கையை சமர்ப்பித்தார். 2018ல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது இதெல்லாம் நடந்து கொண்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மீண்டும் ஒரு இட ஒதுக்கீடு சட்டத்தை 2018ல் நிறைவேற்றியது. அதையும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் மராத்தா  இட ஒதுக்கீடு கொடுத்தது சரிதான் அதனால் 16 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பதிலாக அவர்களுக்கு வேலைவாய்ப்பில் 12 விழுக்காடும், கல்வியில் 13 விழுக்காடும் வழங்க வேண்டும். என்று உத்தரவிட்டது. 2018ல் 102வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சரத்து 338B, 342A, 366 26C போன்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் மாநில அரசாங்கத்திற்கு அதிகாரமே இல்லை என்ற வாதங்களை நிராகரித்துவிட்டு மாநில அரசாங்கத்திற்கு இதுபோன்ற சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. மேற்படி புதிய சரத்துக்கள் மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களை பறிக்கவில்லை. மேலும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15- 4, 16 (4)ல் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு வழக்குகளும், நேரடியாக மராத்தா சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி பல வழக்குகளும் தொடுக்கப்பட்டு, எல்லா வழக்குகளையும் ஒன்றாக இணைத்து 9.9.2020இல் உச்சநீதிமன்றம் மாநில அரசாங்கங்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 342A சேர்த்த பின்பு அதிகாரம் இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்கு அரசியலமைப்பு அமர்வு பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறி, இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு நீதிபதிகளிடம் விசாரணைக்கு வந்த போது, மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை பரிசீலிக்கும் அதே வேளையில் மராத்தா வுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் இருக்கின்ற காரணத்தினால் இது செல்லாது என்றும்,  சிலர் இந்திரா சஹாணி வழக்கில் விதிக்கப்பட்டுள்ள 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்சவரம்பை மறுபரிசீலனை செய்ய அதைவிட பெரிய ஒரு அரசியல் அமைப்பு அமர்வுக்கு வழக்கை அனுப்ப வேண்டும் என்ற வாதங்களும் வைக்கப்பட்டது. அதனால் உச்சநீதிமன்றம் எல்லா மாநில அரசுகளுக்கும் அறிவிப்பு கொடுத்து விட்டு அதன்பின்பு கீழ்க்கண்ட 6 வினாக்களை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை அளிக்கும் விதமாக தீர்ப்பளித்துள்ளது. கேள்வி/வினாக்கள் 6ஆக இருந்தாலும் அடிப்படையில் இரண்டு பொருள் குறித்து தான் இந்த தீர்ப்பு பரிசீலனை செய்கிறது ஒன்று மராத்தா இடஒதுக்கீடு சட்டப்படியானதா? என்றும் இரண்டாவது 102வது அரசியலமைப்பு சட்டம் வந்த பின்பு மாநில அரசாங்கங்களுக்கு இதுபோன்ற சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் இருக்கிறதா? என்ற இந்த இரண்டு பொருள் குறித்தான் பரிசலிக்கப்பட்டது. இருப்பினும் அந்த ஆறு கேள்விகளையும் பார்ப்போம் 

கேள்வி 1.  உச்சநீதிமன்றத்தில் இந்திரா சஹானி வழக்கு நிர்ணயித்துள்ள 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா?

கேள்வி 2 மராத்தா இடஒதுக்கீடு உச்சநீதிமன்றம் கூறிய விதிவிலக்கிற்குள் வருகிறதா?

 கேள்வி 3  ஹைவாட் அறிக்கை மராத்தியர்கள் இட ஒதுக்கீடு வழங்க போதுமான அளவுக்கு ஆதாரங்களை வழங்கியுள்ளதா?

 கேள்வி 4   102வது அரசியலமைப்பு சட்டத்திருத்தின் படி மாநில அரசாங்கங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அறிவிக்கும் அதிகாரத்தை இழந்து விட்டனவா?

கேள்வி 5  சரத்து 342A மாநில அரசுகளுக்கு சரத்து 15-4, 16(- வழங்கிய அதிகாரங்களை பறித்துவிட்டதா?

கேள்வி 6   342 A மாநில அரசாங்கங்களின் அதிகாரங்களை அழிப்பதன் மூலமாக கூட்டாட்சி தத்துவங்களுக்கு எதிரானதா?

 மேற்கண்ட 6 கேள்விகளுக்கும்மான விடைதான் இந்த தீர்ப்பு.  இந்திய திருநாட்டின் பல மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தார்கள் மத்திய அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் கே கே வேணுகோபால் வாதிட்டு  குறிப்பாக கேள்வி 4, 5, 6 சம்பந்தமான பல விளக்கங்களை சமர்ப்பித்துள்ளார். அதாவது 102 வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களை பறிக்கவில்லை. மத்திய அரசாங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலை அறிவிக்கின்ற அதிகாரத்தை மட்டும்தான் ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கிறது போன்ற மேலும் பல வாதங்களை வைத்து இருக்கின்றார். ஆனால் பிரதிவாதிகள் தரப்பின் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் இல்லை இல்லை 102 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் யார் பிற்படுத்தப்பட்டோர் என்று அறிவிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு மட்டும்தான் வழங்கியிருக்கிறது எனவே மாநில அரசாங்கத்திற்கு அந்த அதிகாரம் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தார் மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி 10 முக்கியமான காரணங்களைக் முன்வைத்து இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கலாம் என்றும் 50 விழுக்காடு உச்சவரம்பு இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருப்பதால் இந்திரா சகானி வழக்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வாதங்களை முன்வைத்த அவர் கூறிய 10 காரணங்கள் கீழ்க்கண்டவாறு, வதம் 1 : இந்திரா சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகளில் 6 நீதிபதிகள் தேவைப்பட்டால் 50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு வழங்கி கொள்ளலாம் என்று கூறியிருக்கிறனர்.

 வதம் 2 : 1963ல் வந்த பாலாஜி வழக்கில் 50 விழுக்காடு உச்சவரம்பு நிர்ணயித்த காலங்களிலிருந்து தாமஸ் போன்ற பல வழக்குகளில் பல விதமான தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன.

வதம் 3 : பாலாஜி வழக்கில் சரத்தி 15-4, சரத்து  15-1ன் விதிவிலகு என்று கூறியிருந்தது ஆனால் பின்பு வந்த நீதிமன்ற தீர்ப்புகள் மாறாக விதிவிலக்கல்ல என்று கூறிவிட்டது என்றும் 

வதம் 4 : அரசியலமைப்புச் சட்டம் சரத்து 15-4 மற்றும் 16-4ல் எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடபடவில்லை

வதம் 5 :  இந்திரா சகானி வழக்கு சரத்து 16 -4 சம்பந்தப்பட்ட வழக்கு அது 15- 4 சம்பந்தமான வழக்கு அல்ல

வதம் 6 : இந்திரா சஹானி வழக்கில் அரசு நெறிகட்டுதல் பிரிவுகளான சரத்து 39 மற்றும் சரத்து 46லை  பரிசீலிக்கவில்லை

வதம் 6 : சிறுபான்மை நிறுவனங்களில் 50 விழுக்காட்டிற்கும் மிகக் கூடாது என்று தீர்ப்பு வழங்கிய ஸ்டீபன்சன் வழகுக்கிற்கு எதிராக 11 நீதிபதிகள் கொண்ட டிஎம்ஏ பாய் வழக்குகில் 50 விழுக்காட்டுக்கு மேல் வழங்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது

வதம் 8 : 77 மற்றும் 81வது அரசியல் திருத்த சட்டத்தின் பிரகாரம் 16-4A மற்றும் 16-4B சேர்க்கப்பட்டு பலமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது 

வதம் 9 : 103 வது அரசியலமைப்பு திருத்த சட்டம் பொருளாதார ரீதியாக நலிந்த மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது  எனவே அரசியலமைப்பு சட்டம் 50 விழுக்காட்டை தாண்டிவிட்டது 

வதம் 9 : இந்திரா சகானி வழக்கில் குறிப்பிட்டுள்ள அசாதாரண சூழ்நிலை என்பது ஒரு மாதிரி விளக்கம்தான் முழுமையான பட்டியல் அல்ல என்று பத்து விதமான வாதங்களை முன்வைத்தார்.

உச்சநீதிமன்றம் பத்து வதங்களையும் கீழ்கண்டவாறு நிராகரித்துவிட்டது.

1. இந்திரா சகானி வழக்கையில் 8 நீதிபதிகள் இடஒதுக்கீடு 50 விழுக்காட்டை தாண்டக் கூடாது என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்

2. மாறுபட்ட கருத்துக்களை உடைய பல தீர்ப்புகளை இந்திரா சகானி வழக்கில் பரிசு வைக்கப்பட்ட பின்புதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 

3. சரத்து 15-4 விதிவிலக்கல்ல என்று கருத்திற்கும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வரம்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

4.  அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதிக்கீடு விழுக்காடு குறிப்பிடவில்லை என்றாலும் நீதிமன்றங்கள் முறையாக பரிசோதித்து 50 விழுக்காடு உச்சவரம்பை கூறியுள்ளது 

5. இந்திரா சகானி தீர்ப்பு சரத்து 15-4 மற்றும் 16-4 இரண்டுக்குமே பொருந்தும்.

6.  சரத்து 38 மற்றும் 46 பரிசீலனை செய்யப்ப்ட்டுள்ளது

7. சிறுபான்மையினர் வழக்குக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

8.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சரத்து 16-4Bல் இடஒதுகீடு 50 விழுக்காட்டிற்கும் மிகக் கூடாது என்று அரசியல் அமைப்புச் சட்டமே சொல்லிவிட்டது 

9. பொருளாதாரத்தில் நலந்தவர்களுக்கு 10%  இடஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வேறொரு அரசியல் அமர்வில் பரிசீலனையில் உள்ளதால் அது பற்றி எந்த கருத்தும் கூற இயலாது.

10. இந்திரா சகானி வழக்கில் கூறப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை வெறும் பூகோள வரையறையை மட்டுமல்ல அது சமூக நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது 

எனவே வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வைத்த வாதங்கள் அத்தனையும் நிராகரிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் ஐந்து நீதிபதிகளும் மராத்தா இட ஒதுக்கீட்டில் அதாவது முதல் மூன்று சட்ட கேள்விகளுக்கும் ஐந்து நீதிபதிகளும் ஒரே கருத்தை கூரியிருக்கின்றனர். ஆனால் மாநில அரசிற்கு அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு அதாவது கேள்வி 4,5,6 சம்பந்தமாக இரண்டு நீதிபதிகள் அரசியலமைப்பு சட்ட திருத்தம் மாநில அரசின் அதிகாரத்தை மாற்றவில்லை என்றும் மூன்று நீதிபதிகள் இல்லை இல்லை அரசியலமைப்பு சட்ட திருத்தம்  பிற்படுத்தப்பட்டோர் என்று அறிவிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு மட்டுமே வழங்கியுள்ளது எனவே மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி உள்ள காரணத்தினால் எல்லா மாநில அரசாங்கங்களும் தயாரித்து வைத்துள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் செல்லாமல் போய்விட்டது. இது பல குழப்பங்களை உருவாக்கும் என்பதனால் ஜனாதிபதி உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வெளியிட வேண்டும் என்றும் அதுவரை மாநிலங்களின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளது இந்த தீர்ப்பில் பல கூறுகள் இட ஒதுக்கீடு சட்டத்தை, இட ஒதுக்கீட்டு நடைமுறையை பெரிய அளவில் மாற்றக் கூடியதாக இருக்கின்றது என்பதால் எல்லா உறவுகளும் தயவுசெய்து முழு தீர்ப்பையும் படிக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் இடஒதுக்கீடு சட்டத்திலும் இடஒதுக்கீடு நடைமுறையிலும் பல மாற்றங்கள் நிகழ போகிறது. அதற்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் அனைவரும் தெளிந்த சிந்தனையோடு ஒற்றுமையோடும் தயாராக இருக்க வேண்டும் 

சீர்மரபினர் நலச்சங்கம், தமிழ்நாடு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved