தமிழக முதல்வருக்கு வாழ்த்துகள்! வாரியம் வழங்குக!- விடுதலைக்களம்.
தமிழக முதல்வருக்கு இராஜம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
1. நடந்து முடிந்த தமிழகத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக களம்கண்டு,தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, தனிப்பெரும்பான்மையுடன் திமுகழகத்தை வெற்றிபெறச்செய்து, தமிழகத்தின் 13-வது முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ அவர்களுக்கு தமிழகத்தில் 20 மாவட்டங்களில் வாழும் 40 லட்சம் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் விடுதலைக்களம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
2. பரந்து விரிந்த பாளையக்காரர்களாக இருந்த தொட்டிய நாயக்கர் சமுதாயம் ஆங்கிலேயேர்கள் காலத்தில் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகி, சொல்லெனா துயரத்தில் இருந்த சமூகத்திற்கு, சிதிலமடைந்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சைக்கோட்டையை மீண்டும் உருவாக்கி கம்பளத்தாருக்கு அடையாளம் வழங்கிய கலைஞரின் ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ளது, தொட்டிய நாயக்கர் போன்ற சிறுபான்மை சமூகங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
3. கழகத்தின் தேர்தல் அறிக்கை வரிசை எண்.455-இல் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை தலைநகர் சென்னையில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது, திமுகழகம் தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதற்கு ஆதாரம். இதற்கு தொட்டிய நாயக்கர் சமுதாயத்தி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
4. தமிழகம் முழுவதும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் திமுகழகத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்தபோதிலும், 1977 சட்டமன்றத்தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட திரு.க.சுப்பு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது தவிர கடந்த 45 ஆண்டுகளாக யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே எங்கள் சமுதாயத்தைச்சேர்ந்த தகுதியுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு வாரியத்தலைவர் பதவியும், நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.