DNT அரசாணை வெளியிடுக! தமிழக அரசிடம் கோரிக்கை!
சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் "DNT" அரசாணை உடனே வெளியிடக்கோரிய மனு, புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன், சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. மாண்புமிகு அமைச்சருக்கு "கொரானோ" தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தனிப்படுத்திக்கொண்டுள்ளதால், நேரடியாக சந்திக்கமுடியவில்லை. மாண்புமிகு அமைச்சர் தொற்றிலிருந்து விரைவில் பூரண குணமாகி மீண்டுவர DNT சமுதாயத்தினர் அனைவரும் பிராத்திக்கின்றோம். அமைச்சர் வழக்கமான பணிக்கு திரும்பியவுடன் நேரில் சந்தித்து மீண்டும் வலியுறுத்தப்படும்.