மராத்தா இடஒதுக்கீடு தீர்ப்பால் தமிழக 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்தா?
மராத்தா இட ஒதிக்கீடு தீர்ப்பால், தமிழக 69 விழுக்காடு இட ஒதிக்கீடு சட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது. 9-வது அட்டவணை பாதுகாப்பை தவிர்த்து மேலும் சில நுட்பமான அரசியலமைப்பு சட்டப்பாதுகாப்பு தமிழக இட ஒதுக்கீடு சட்டம் 45/1994 உண்டு. (இதுகுறித்த விரிவான விளக்கத்தை சட்ட ஆலோசகர் ஜூம் (12.05.2021) மீட்டிங்கில் விளக்கியுள்ளார்). எனவே தமிழக இட ஒதுக்கீடு ஆபத்து என்று யார் விளக்கம் அளித்தாலும் உறவுகள் நம்ப வேண்டாம். அதேபோன்று இஸ்லாமியர் இடஒதுக்கீட்டிற்கோ, அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கோ எந்த ஆபத்தும் வராது. ஆனால் வன்னியர் இடஒதுக்கீடு மட்டுமே செல்லாது. ஏனென்றால், பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்தும் அதிகாரம் 2018-ற்குப் பிறகுதான் மாற்றப்பட்டுள்ளது. அதனால் வன்னியர் இடஒதுக்கீடு மட்டுமே செல்லாது. இடஒதுக்கீடு அதிகாரத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே தேவையில்லா அச்சம் கொள்ளத் தேவையில்லை. இடஒதுக்கீடு சம்பந்தமாக பொதுபுத்தியில் பல தவறான பார்வையுள்ளது. இடஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவம். இது அனைவருக்குமானது.
இவண்,
சீர்மரபினர் நலச்சங்கம்.