தொட்டிய நாயக்கருக்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்குக! - முதல்வருக்கு குவியும் மனு!
தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் திரு.செந்தில்குமார் அனுப்பியுள்ள கோரிக்கி மனுவில், தமிழக முதல்வர், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப்பயணத்தின்பொழுது, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பொதுக்கூட்டத்தில் அறிவித்தபடி, உடனடியாக 68 சமுதாய மக்களுக்கு உடனடியாக DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
இதேபோல், அனைத்து சமுதாய அமைப்புகளும், மாணவ-மாணவியர், கற்றரிந்த பெருமக்கள் அனைவரும் தங்களது பெயரில் மனுக்களை முதல்வரின் இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.