🔴 LIVE | முப்பெரும் விழா 2023


குவியட்டும் DNT ஒற்றைச்சான்றிதழ் கோரிக்கை மனு! - மொபைலில் இருந்து முதல்வருக்கு அனுப்புவது எப்படி? வீடியோ விளக்கம்!

தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்கக்கோரி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுக்களை அனுப்பிட வேண்டுமாய், அனைத்து சமுதாய அமைப்புகளும் கோரிக்கை வைத்துள்ளன. அதனடிப்படையில் , உங்களது மொபைல் போனிலிருந்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு எப்படி கோரிக்கை மனுவை அனுப்புவது என்று எளிய முறையில் கீழேயுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. சமுதாய நலனில் அக்கறையுள்ள அனைவரும் இக்கோரிக்கையை முதல்வருக்கு அனுப்பி, நமது சமுதாய மாணவ கண்மணிகள் பலன்பெற உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். கோரிக்கை மனுவின் விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை காபி-பேஸ்ட் செய்து, உங்கள் முகவரியை தட்டச்சு செய்து அனுப்பவும்.

அனுப்புனர்

உங்கள் பெயர் மற்றும் முகவரி .                                                                                         

   

பெறுநர்

மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்

தமிழக முதல்வர், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை

சென்னை - 9

ஐயா

பொருள்: DNT/DNC இரட்டை சான்றிதழ் முறையை ஒழித்து 1979க்கு    முன்பு போலவே ஒரே DNT சான்றிதழ் வழங்க வேண்டி மனு.

தமிழகத்தின் வீர பூர்வகுடி 68 சமூக மக்கள் ஆங்கிலேயர்களுக்கு தொடர் அச்சுறுத்தலாக இருந்ததால் குற்றப்பழங்குடி சட்டம் போட்டு (Notified Tribes) என்ற அடிப்படையில் பல அடிப்படை வாழும் உரிமைகள் முற்றிலுமாக பறிக்கப்ப்பட்டு சமூகத்தின் அடித்தட்டுக்கு தள்ளப்பட்டனர். அச்சட்டம் நாடுமுழுவதும் 1952ல் நீக்கப்பட்டு (Denotified Tribes-DNT) என்று மாற்றப்பட்டனர். விடுதலைக்கு முன்பும் பின்பும் பழங்குடி என்ற அடிப்படையில் கட்டணமில்லா கல்வி வழங்கப்பட்டுவந்தது. அரசாணை(GO) 1310 நாள் 30.7.1979 மூலம் அன்றைய அதிமுக அரசு பொய்யான காரணங்களை சொல்லி  பழங்குடி என்ற வார்த்தையை நீக்கிவிட்டு “சமுதாயம்” ( Denotified Communities - DNC) என மாற்றிவிட்டது. அதன்விளைவாக கட்டணமில்லா கல்வி முதல் பல முன்னுரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டனர்.

இம்மக்களின் DNT சான்று கோரிக்கையை 1998-ல் திமுக அரசின் அமைச்சரவை கூட்டம் பரிசீலித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கருத்தை பெறுமாறு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் ஆணையம் முறையாக ஆராயாமல் DNC பெயர்மாற்றம் மத்திய அரசால் மாற்றப்பட்டது என்று ஒரு பொய்யான கருத்தை தெரிவித்ததால் அக்கோரிக்கை நிறைவேறவில்லை.  

2014ம் ஆண்டு ஆதாரங்களோடு மத்திய அரசு ஒருபோதும் DNC என்று மாற்றவில்லை என்றும் பொய்யான ஜோடிக்கப்பட்ட காரணத்தைவைத்தே எம்மக்களின் உரிமை பறிக்கப்பட்டது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்ததால், 2018ல் அதுல்ய மிஸ்ரா IAS தலைமையில் 4 IAS அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, விரிவான ஆய்விற்கு பிறகு,  மீண்டும் அவர்களுக்கு DNT சான்று வழங்க எந்த தடையுமில்லை என்று பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் அநீதியான அரசாணை(GO)  1310/30.7.1979  புதிய அரசாணை(GO)  26 நாள் 8.3.2019ன் மூலம் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.  இருப்பினும், புதிய அரசாணை(GO)  26ல் பத்தி 4ல் மத்திய அரசுக்கு DNT என்றும் மாநில அரசுக்கு DNC என்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று 68 சமூகங்களை இழிவுபடுத்தும் இரட்டை சான்றிதழ் முறையை நடைமுறைப்படுத்தியது. 

DNT என்றாலும் DNC யே. எனவே DNC என சான்று வழங்கியிருக்கக்கூடாது 1979க்கு முன்புபோலவே ஒரே DNT சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும். அதிமுக அரசால் ஏமாற்றப்பட்ட 68 சமூக மக்கள் அவ்வரசு மீது கடும் கோபத்திலிருந்தனர். அந்நேரத்தில் தேர்தல் பரப்புரையின் போது ஆற்றல்மிகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது “ஆலங்குளம் அறிவிப்பில்” DNT மக்களின் பிரச்சனைகள் குறித்து தெளிவான விளக்கமும் இரட்டை சான்றிதழ்முறை ஒழிக்கப்பட்டு 1979க்கு முன்பு போலவே ஒரே DNT சான்று வழங்கப்படும் என்று அறிவித்தது, எம்மக்கள் மத்தியில் பெறும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

எம்மக்களின் எளிமையான கோரிக்கையை நிறைவேற்றுவதால் அரசுக்கு எந்தவிதமான கூடுதல் செலவினங்களும் இல்லை. மாறாக DNT மக்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பல திட்டங்களை தமிழகத்திற்கு பெற ஏதுவாக இருக்கும். 

எனவே எம்மக்களின் நியாயமான கோரிக்கையான மேற்படி அரசாணை(GO)  26ல் பத்தி 4யை  திருத்தி  DNC பிரிவினர் இனிமேல் DNT பிரிவினர் என்று அழைக்கப்படுவர், தமிழில் சீர்மரபினர் என்பது சீர்மரபு பழங்குடிகள் என்று அழைக்கப்படும். ஒரே DNT சாதி சான்று வழங்கப்படும் என்றும் உத்தரவிடுமாறு பணிந்து கேட்டுக்கொள்கிறோம்.    

இப்படிக்கு

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved