🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் பதவிகாலத்தை நீட்டிக்க தேவையில்லை!- அரசுக்கு சீர்மரபினர் நலச்சங்கம் கடிதம்!

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சட்டப்படி மத்திய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்ற சட்ட ரீதியான கருத்துக்களை முன்வைத்து, தமிழக அரசின் தலைமை செயலர, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைச் செயலாளர் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி.குணசேகரன் ஆகியோருக்கு கடந்த 25ஆம் தேதி சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.


அக்கடிதம் அனைவருக்கும் கடந்த 27.05.2021 அன்று சென்றடைந்துள்ளதை, அங்கிருந்து வந்த ஒப்புகைச்சீட்டின் மூலம் தெரியவருகிறது. மேலும் இக்கடிதத்தில் நீதியரசர்.குலசேகரன் ஆணையத்தை  நீடிப்பதற்கும் சட்டத்தில் இடமில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.


இவ்விசயத்தில் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில், அரசினுடைய பதிலுக்காக காத்திருக்கிறோம். கொரானா பெருந்தொற்று காலமாக இருப்பதால் நம்முடைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தமுடியாத சூழலில், பொறுத்திருக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.


டிஎன்டி சமுதாயங்களின் ஆதரவுடன் முழுமையான டிஎன்டி சான்றிதழையும், சலுகைகளையும் பெற்றுத் தருவதோடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முறையான ஆணையம் அமைக்கவும், தனி இடஒதுக்கீடு பெறுவதற்கும் இறுதிவரை போராடுவோம் என்று உறுதியளிக்கின்றோம். இதேபோல் தொடர்ந்து உங்கள் நல்லாதரவை சீர்மரபினர் நலச்சங்கத்திற்கு தொடர்ந்து வழங்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


இவண்,

சீர்மரபினர் நல சங்கம்.

 30.05.2021

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved