கலைஞரின் 98-வது பிறந்தநாளை மாநிலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடிய திமுக தலைவர்கள்!
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக அரைநூற்றாண்டுக்கும் மேலாக இருந்தவரும், தந்தைப்பெரியார், பகுத்தறிவு பகலவன் அறிஞர் அண்ணா ஆகியோரின் சமூகநீதி கோட்பாட்டை, அரசியல் அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றி, தமிழகத்தைச் செதுக்கிய சிற்பியுமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாளான இன்று நாடுமுழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீண்டும் நிறுவி, இராஜகம்பளத்தார் சமுதாயத்திற்கு முகவரி தந்தவரின் 98-வது பிறந்தநாளை தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் அதே நன்றிக்கடனுடன் மரியாதை செலுத்தினர். மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக்கழகத்தில் பொறுப்புகளில் உள்ளவர்கள் மிகச்சிறப்பாக கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியக்கழக செயலாளர் திரு.M.செல்வராஜ், அரவக்குறிச்சி நகரச்செயலாளர் திரு.அண்ணாதுரை, அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் திரு.மணிகண்டன், இராசிபுரம் ஒன்றிய துணைப்பெருந்தலைவர் திருமதி.சந்திரா சிவக்குமார், புதுச்சத்திரம் ஒன்றிய துணைப்பெருந்தலைவர் திரு.ராம்குமார் ஆகியோர் அவரவர் பகுதி சார்ந்த இடங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.
இதேபோல், கோவை மாநகராட்சி 100-வது டிவிசனுக்குட்பட்ட ஈச்சனாரி பகுதியில் செயலாளர் திரு.மகாலிங்கம் அவர்களின் தலைமையில் கழகக்கொடியினை ஏற்றி, கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இவ்விழாவில் துப்புரவுப்பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டியும், மதியம் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கியும் கொண்டாடினர்.
இதேபோல் மாநிலம் முழுவதுமுள்ள திமுக ஊராட்சிமன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைக்கழக, ஒன்றிய, மாவட்டக்கழகங்களில் பொறுப்புவகித்துவரும் தலைவர்களும் தங்கள் பகுதிகளில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாளை சிறப்பாகக்கொண்டாடினார்.