இசைமேதை நல்லப்பசுவாமிகளின் நினைவுச்சின்னத்தில் திருமதி.கனிமொழி கருணாநிதி அஞ்சலி!
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிக்காக அங்கேயே முகாமிட்டு தீவிரமாக பணியாற்றிவரும் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி.கனிமொழி அவர்கள், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும், நிவாரண உதவி கிடைப்பதற்கும் பெரும்பங்கு வகித்தார். முன்னாள் முதல்வரும் தந்தையுமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாளுக்காக அஞ்சலி செலுத்த கடந்த 03-ஆம் தேதி சென்னை திரும்பினார்.
அதனை முடித்துக்கொண்டு மீண்டும் தூத்துக்குடி சென்று கொரோனா நிவாரணபணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே மறைந்த எழுத்தாளர் கி.இராஜநாரயணனுக்கு சிலை அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்வதற்காக இடைச்சேவல் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டார். இப்படி முழுவீச்சில் பரபரப்பாக செயல்பட்டு வருபவர், விளாத்திக்குளம் அருகேயுள்ள இசைமாமேதை நல்லப்பசாமிகளின் நினைவுச்சின்னத்திற்கு சென்று அங்குள்ள திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர், புதூர் ஒன்றிய செயலாளர் திரு.M.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.