காலங்கள் கடந்தாளும் கால் தடங்கள் மாறுவதில்லை!
இவரின் பெயர் செல்வி.லோகநாயகி. தென்காசி மாவட்டம் சங்கரங்கோவில் அருகேயுள்ள களப்பாகுளம் கிராமத்தைச் சேந்தவர். இவரின் தந்தை முன்னாள் இராணுவ வீரர்.
செல்வி.லோகநாயகிக்கு வரும் வெள்ளியன்று(11.06.2021) திருமணம் நடைபெற்வுள்ளது. லோகநாயகி பிறக்கும்பொழுதே கீழ் உதடு இல்லாமல் பிறந்துவர். 2002-ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர்.வைகோ அவர்களை சந்தித்த இவரின் தந்தை, தன் மகளின் இக்குறைபாட்டை சரிசெய்ய மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை கடிதம் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
பெண் குழந்தையின் எதிகாலத்தை உணர்ந்த பொதுச்செயலாளர் வைகோ, உடனடியாக தன்னுடைய சொந்த செலவில் குழந்தையையும், பெற்றோர்களையும் சென்னைக்கு வரவழைத்து, புகழ்பெற்ற அறுவைசிகிச்சை மருத்துவர் மூலம் சிகிச்சையளித்து, இயற்கையாக உள்ள உதடு போல சரிசெய்யப்பட்டு. தன் செலவிலேயே அவர்களை சொந்த ஊருக்கும் அனுப்பி வைத்தார் வைகோ.
தற்பொழுது அவர் பி.பி.ஏ(தட்டச்சர்) பட்டப்படிப்பை முடித்துள்ளவருக்கு வரும் வெள்ளியன்று திருமணம் நடைபெறுகிறது. பெண்குழந்தையின் எதிர்காலம் குறித்து மிகவும் வேதனையோடு இருந்த பெற்றோர்களுக்கு, வைகோ அவர்கள் செய்த உதவி மிகப்பெரிய நிம்மதியை அளித்தது. தங்களின் நன்றியை வெளிப்படுத்த வாய்ப்புகளின்றி தவித்தவர், தன் மகளின் திருமணம் மூலம் அதை நிறைவேற்றவுள்ளார். திருமணம் முடிவானவுடன் மணமகனின் வீட்டாரிடம் வைகோ அவர்களின் உதவியை விளக்கிக்கூறி இருவீட்டார் சம்மதத்துடன் திருமண அழைப்பிதழில் வைகோ அவர்களின் புகைப்படத்தை முன்பக்கத்தில் அச்சடித்து தன் நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியின் மூலம் வைகோவுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்பதல்ல நோக்கம். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தபால்தலை வெளியிட தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்களை குறிப்பாக மறைந்த சங்கையா மற்றும் ஆசிரியர் நல்லையா உள்ளிட்டவர்களை டெல்லி வரவழைத்து, அங்கு மத்திய அமைச்சர் ஜக்மோகனை சந்திக்க ஏற்பாடு செய்து, தபால்தலையை பெற்றுத்தந்து, தன் சொந்த செலவில் விமானம் மூலம் திருப்பி அனுப்பிவைத்தார் என்பதை ஆசிரியர் நல்லையா பலமுறை சொல்லக் கேட்டுள்ளோம்.
ஆண்டுகள் பல கடந்தாலும் தபால்தலை வெளியிட உதவிகரமாக இருந்த திரு.வைகோ அவர்களுக்கு கம்பளத்தார்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், கிராமப்புறங்களில் கீழ்/மேல் உதடு பிளவு பிரச்சினையுடன் இருப்பதைக்காணலாம். அறியாமை காரணமாகவோ அல்லது பெருளாதார காரணங்கள் காரணமாகவோ உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டு உரிய சிகிச்சை அளித்திட சமுதாய அமைப்புகளும், சமுதாய ஆர்வலர்களும் முன்வரவேண்டும்.