கட்டுமானப்பொருட்களின் கடுமையான விலைஉயர்வு பொருளாதாரத்தை சீரழிக்கும்! முதல்வர் தலையிட கோரிக்கை!
கோரானோ இரண்டாவது அலையின் தாக்கம் நாடுமுழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெற்று, அக்கட்சியின் தலைவர் தளபதி.மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக மே-7ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். கொரானோ தொற்றின் பாதிப்பு மிக அதிக அளவில் பரவிவந்த நிலையில், பதிவியேற்றுக்கொண்ட இரண்டாவது நாளே முழுஊரடங்கை அறிவித்த முதல்வர், கூடவே தேர்தல் வாக்குறுதி அளித்தபடி ஜூன்'03ஆம் தேதி அளிப்பாதாக சொன்ன 4000 ரூபாய் நிவாரண உதவியை முன்கூட்டியே 2000 ரூபாய் வழங்கி மக்கள் பாதுகாப்போடும், நிம்மதியோடும் ஊரடங்கை எதிர்கொள்ளச்செய்தார்.
தேர்தல் முடிவு வந்த மே-02ஆம் தேதியிலிருந்தே கொரானோ தாக்கம் பற்றி முழுமையாக அதிகாரிகள் மூலம் அறிந்துகொண்டு, அதிகாரிகளை துரிதப்படுத்திய முதல்வர், அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட நொடிமுதல் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் முடுக்கிவிட்டு முழுவீச்சில் செயல்பட்டதின் விளைவாக, ராக்கெட் வேகத்தில் மேல்நோக்கி சென்றுகொண்டிருந்த தொற்றின் எண்ணிக்கையை மூன்றே வாரங்களில் கட்டுக்குள் கொண்டுவந்து மக்களின் அச்சத்தை போக்கியுள்ளார். இதன்விளைவாக கடந்த இருவாரங்களாக தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கொரானோ முதல் அலையின்பொழுது கிராமப்புறங்களில் பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் இரண்டாவது அலையில் நோயாளிகளின் எண்ணிக்கையும், ஆக்சிஜன் படுக்கைகளின் தேவையும் மளமளவென்று அதிகரித்ததில் ஒருவாரகாலம் தமிழகமே திண்டாடிப்போனது. மேலும் இரண்டாவது அலையின் தாக்கம் கிராமப்புறங்களிலும் நோயாளிகளின் எண்ணிக்கை மல மலவென அதிரிக்க மாநிலமே அல்லோகலப்பட்டுப்போனது. தமிழகத்திலுள்ள அடிப்படை மருத்துவக்கட்டமைப்பின் முன் கொரனோவால் ஒருரிரு வாரகாலமே தாக்குப்பிடிக்க முடிந்தென்றாலும், பெரும் உயிர் இழப்புகளையும், ஆறாதவடுக்களையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.
அமைச்சர் பெருமக்கள் கொரானோ பணிகளில் தீவிரமாக மூழ்கியிருக்க, முதல்வர் பல்வேறு துறைகளில் அதிரடி மாற்றங்களைச்செய்து, ஒருபுதிய தமிழகத்தைக் கட்டமைக்கும் நோக்கில் தொலைநோக்குப் பார்வையோடு துறைச்சார்ந்த, நிபுணத்துவம் வாய்ந்தவர்களை பல்வேறு ஆலோசனைக்குழுக்களில் இடமளித்து, இந்தியாவையே தன் பக்கம் திரும்பச்செய்துள்ளார். முதல்வரின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும்வகையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.டி.ஆர், சேகர்பாபு உள்ளிட்டோர் கொரானோவையும் வெற்றிகரமாக கையாண்டுகொண்டு, தங்கள்துறை சார்ந்த பணிகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி முத்திரை பதித்து வருகின்றனர்.
பல்வேறு நடவடிக்கைகளால் மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் எகிரச்செய்துள்ள அரசுக்கு சவால்கள் மிகஅதிகம் என்பதே விசயமறிந்தவர்கள் கருத்தாக உள்ளது. அதற்கு ஏற்றாற்போல், ஒருமாதகால ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில், மக்களும், நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களை அச்சுறுத்தும்வகையில் கட்டுமானப்பொருட்களின் கடுமையான விலையேற்றம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டண உயர்வு, சமையல் எண்ணெய்கள் விலை உயர்வு என கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தத்தளித்து வரும் சாமானிய மக்களுக்கு, அடுத்தடுத்த ஊரடங்கால் வேலை இழப்பு, சம்பள உயர்விண்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் சூழந்துள்ளநிலையில், விவசாயத்திற்கு அடுத்து ஏழை, எளிய மக்கள் அதிகம் நம்பியிருப்பது கட்டுமான வேலைகள் மட்டுமே. ஆனால் சிமெண்ட், இரும்புகம்பி, மணல், செங்கல் உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தால், கட்டுமான வேலைகள் முடங்கும் ஆபத்து உள்ளது. கட்டுமானத்துறை முடங்கும்நிலை ஏற்பட்டால் வேலையிண்மை அதிகரிப்பதுடன், அரசின் பத்திரப்பதிவுதுறையின் வருவாயும் குறைந்து அரசுக்கு பெரும்வருவாய் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே தமிழக முதல்வர் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகண்டு, கொரானோ பெருந்தொற்றிலிருந்து மீண்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவழிவகை செய்து, மக்களின் கரங்களில் பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து, பொருளாதார மந்தநிலையைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.