சென்னையில் சிலை!- முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு செய்க!
2021-சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று திராவிட முன்னேற்றக்கழகத்தை பத்தாண்டு காலத்திற்குப்பின் மீண்டும் அரியணையில் அமர்த்தி தமிழக முதல்வராக பொறுப் பேற்றுக்கொண்டுள்ள தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைக்களத்தின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். கடும் சவால்களுக்கு மத்தியில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கச்செய்கிறது.
வரும் 21-ஆம் தேதி கூடும் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாவீரன் கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கும் அறிவிப்பினை வெளியிட்டு, விரைந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறோம்.
இவண்,
கொ.நாகராஜன்,
நிறுவன தலைவர், விடுதலைக்களம்.