🔴 LIVE | முப்பெரும் விழா 2023


செட்டிகுறிச்சியில் பயங்கர தாக்குல்- தலைவர்கள் கண்டனம்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதில் பலர் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த திங்களன்று சின்ன செட்டிக்குறிச்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் இருசக்கர வாகனங்களில் வேகமாக செட்டிகுறிச்சி வழியாக சென்றுள்ளனர்.  அப்பொழுது செட்டிகுறிச்சியை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வேகமாக சென்ற வாலிபர்களை மெதுவாக செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். 

இதனால் ஆத்திரமுற்ற வாகனத்தில் வந்த வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு சின்ன செட்டிகுறிச்சியில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.  அங்கிருந்து வந்த ஒரு கும்பல் செட்டிகுறிச்சில் உள்ளவர்களை கடுமையாக தாக்கியதுடன், வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியதுடன்,  அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.  

இச்சம்மவத்தில் இருதரப்பிலும் காயங்கள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.  படுகாயமுற்ற 10-க்கும் மேற்பட்ட செட்டிகுறிச்சியை சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கண்காணிப்பாளர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடன்,  இப்பிரச்சினை குறித்து வழக்குப்பதிவு செய்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 

அமைதியாக வாழ்ந்துவரும் செட்டிகுறிச்சி மக்கள்மீது வன்முறையை ஏவியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைக்களம் நிறுவன தலைவர் கொ.நாகரஜன் மற்றும் மகாஜனசங்க பொதுச்செயலாளர் சௌந்திரபாண்டியன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து செட்டிகுறிச்சியில்  போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பளித்து வருகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved