🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மீண்டும் தொடங்கியது DNT சமுதாயத்தினரின் போராட்டம்!

DNT-ஒற்றைச்சான்றிதழ், மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி 68-சமுதாயங்களை உள்ளடக்கிய சீர்மரபின சமுதாய மக்கள் பலவருடங்களாக போராடி வருகின்றனர். இதற்கிடையே 116 சாதிகளைக் கொண்ட எம்.பி.சி. 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், ஒரு சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு 115 சமூகங்களுக்கு அநீதி அளித்துச்சென்றது. இதனையடுத்து புதிதாகப்பொறுப்பேற்றுள்ள திமுக அரசுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை நிறைவேற்றக்கோரி பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதை முறியடிக்கும் பொருட்டு, தங்கள் தரப்பு நியாயத்தை முதல்வரிடம் விளக்கிக்கூற  நேரம் ஒதுக்கக்கோரி 115 சமுதாய பிரதிநிதிகள் கடிதம் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே தமிழக அரசு அழுத்தத்திற்கு பணிந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தேர்தல் பிரச்சாரத்திண்பொழுது தமிழக முதல்வர் அளித்த "ஒற்றைச்சான்றிதழ்" வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும், தேனியில் மாவட்ட ஆட்சியர் முன் 115 சமுதாய மக்களின் சார்பில் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சீர்மரபினர் நல்ச்சங்கத்தின் மாநில செயலாளர் திரு.சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved