🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அம்பாசங்கர் கமிஷன் பெயரில் ஏமாற்றப்பட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள்!

சமூகநீதியில் அதிமுகவின் மாபெரும் மோசடி அம்பலம்!

உறவினர்களுக்கு வணக்கம்.

1985ஆம் ஆண்டு தமிழக அரசு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் மாபெரும் மோசடி நடந்துள்ளது. அந்த ஆணையத்தின் அறிக்கையை மறைத்து ஒரு தனிநபரின் அறிக்கையை ஆணையத்தின் அறிக்கையாக 1985ல் இருந்து இன்றுவரை முன்வைக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் அந்த ஆணையத்தின் 21 உறுப்பினர்களில் கீழ்க்கண்ட 14 உறுப்பினர்கள் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் உள்பட பெரும்பான்மை உறுப்பினர்கள் அரசுக்கு சட்டப்படியான பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
Members:
Thiruvalargal
1. G. விஸ்வநாதன்
2. V.V.சாமிநாதன், MLA
3. அன்பில் தர்மலிங்கம்
4. M. ஜான் வின்சண்ட், MLA
5. K. லியாகத் அலிகான்
6. Tmt. செளந்தர கைலாசம்
7. S. கோபாலகிருஷ்ண யாதவ்
8. குழ செல்லையா
9. I.D. ஜவகர் ராஜ்
10. S.K. பாலகிருஷ்ணன்
11. இயக்குனர் பிற்படுத்தப்பட்டோர் துறை உறுப்பினர் செயலாளர்
12. இணை செயலாளர், சட்டத்துறை கூடுதல் உறுப்பினர் செயலாளர்.
13. M.K. பாலசுப்பிரமணியன், IAS (RETD)
14. குமரி ஆனந்தன், MLA

ஆனால் அந்தப் பெரும்பாலான உறுப்பினர்களின் பொது அறிக்கையும் பரிந்துரைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. உண்மையை மறைத்து கெட்ட எண்ணத்தோடு, நிராகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை ஆணையத்தின் பரிந்துரையாக அதன் தலைவர் மட்டும் கொடுத்த அறிக்கையை வைத்து கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் சமூகநீதி மோசடி நடந்து வருகிறது. எடப்பாடி அதிமுக அரசு அந்த மோசடியான ஒரு நபர் அறிக்கையின் அடிப்படையிலேயே 10.5% இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. உண்மை ஆணையத்தின் பரிந்துரையில் மிகத் தெளிவாக ஆதாரங்களையும் புள்ளிவிவரங்களையும் சுட்டிக்காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு சரியாக கணக்கிடப்படவில்லை, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, சில சமூகங்களின் மக்கள்தொகை எண்ணிக்கையைப் பல மடங்கு கூட்டிக் காட்டியும், சில சமூகங்களை மிகவும் குறைத்துக்காட்டியும் இருக்கிறது, இது இயற்கைக்கு முரணாக உள்ளது என்று அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் ஆணையத்தின் தலைவர் உறுப்பினர்களை அனைவரையும் கிள்ளுக் கீரையாக நினைத்து, கணக்கெடுப்பின் முடிவுகளை இறுதிவரை மற்ற உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ளவே இல்லை. கடைசிநேரத்தில் பகிர்ந்து கொண்ட பொழுது எங்களுக்குக் கிடைத்த குறைவான காலத்தில் உறுப்பினர்கள் அனைவரும் அந்த மக்கள் தொகை புள்ளி விவரங்களைப் பார்த்த பொழுது அதிர்ந்து போனோம். எனவே நாங்கள் 14 உறுப்பினர்கள் அரசுக்குப் பொதுஅறிக்கை சமர்ப்பிப்பது என்று முடிவுசெய்து இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கின்றோம். இதில் முதலாவதாக இந்தக் கணக்கெடுப்பு குறைபாடுடையது, அரைகுறையானது, நம்பத்தகுந்ததாக இல்லை என்றும், குறிப்பாக கிறிஸ்துவ மக்களுடைய மக்கள் தொகை எண்ணிக்கை முதல் சுற்றில் 22 லட்சம் என்றும் இரண்டாவது சுற்றில் 29 லட்சம் என்றும் முன்னுக்குப்பின் முரணாக புள்ளிவிவரங்கள் உள்ளது என்றும், அதேபோன்று மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் 485027 பேர் என்று முதல் சுற்றிலும், இரண்டாவது சுற்றில் மதம் மாறிய கிருஸ்துவ நாடார்கள் மட்டுமே 948500 என்றும் புள்ளிவிவரங்கள் கூறியுள்ளது, முன்னுக்குபின் முரணாகவுள்ளது. அதுதவிர செளராஷ்ட்ரா, பார்க்கவகுலம், வலையர், முஸ்லீம், முத்துராஜா, யாதவர், அகமுடையார் போன்ற பல சாதிகளினுடைய எண்ணிக்கை மிக குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்பதை அந்தந்த சமூகங்களே எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, சமூக, கல்வி நிலைகளை கணக்கிடுவதில் மண்டல் கமிஷன் ஆணையம் போல் முறையான அளவுகோல்களைப் பயன்படுத்தவில்லை. வறுமையை, சமூக நிலையை கணக்கிடுவதில் சேர்த்து இருக்கின்றார். அது பொருளாதாரக்காரணியாக உள்ளதால் அதைத் தனி அளவுகோலில்தான் வைத்திருக்க வேண்டும். எனவே நாங்கள் சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட தன்மையை அளவிடுவதற்கு தலைவர் குறிப்பிட்டுள்ள 15 புள்ளிகள் எண்ணிக்கை அளவுகோலுக்கு பதிலாக 18 புள்ளிகள் எண்ணிக்கை அளவுகோலை பரிந்துரைக்கின்றோம். சமூக நிலைக்கு 9 புள்ளிகளும், கல்வி நிலைக்கு 6 புள்ளிகளும் மற்றும் வறுமைக்கு மட்டும் 3 புள்ளிகளும் மொத்தம் 18 புள்ளிகளை அளவாக வைத்து அளவிடவேண்டும். மேலும் இந்த அளவுகோள்களில் மாநில சராசரியைவிட ஒருகுறிப்பிட்ட விகிதம் விலகியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தமிழக அரசின் தொடர் நலத்திட்ட நடவடிக்கையால் இந்த அளவுகளில் பெரிய வேறுபாடுகள் இருக்காது. எனவே மாநில சாரசரிக்கும் குறைவாக இருந்தாலே புள்ளிகள் வழங்கவேண்டும் என்றும், அதில் 9 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தால் அந்த சமூகங்களை பிற்படுத்தப்பட்டோர் என்று அழைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் இரண்டாவது சுற்று, மாதிரி கணக்கெடுப்பு புள்ளிவிபர விதிமுறைப்படி இல்லை என்றும், மாதிரி கணக்கெடுப்பு நடத்துகின்ற காரணத்தினால் பல சிறிய சமூகங்களின் உண்மையான நிலை தெரியவராது. எனவே சிறப்பு மதிப்பீட்டின் மூலமாக அப்படிப்பட்ட சமூகங்களையெல்லாம் கண்டறிய வேண்டும். உண்மையான கள ஆய்வு நிலவரம் அந்தந்த சமுதாய நிலவரத்திற்கு மட்டும் ஆறு மதிப்பெண்கள் சேர்த்து மொத்தம் 24 மதிப்பெண்களில் 12 புள்ளிகளுக்கு அதிகமாக யார் பெறுகிறார்களோ அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் என அறிவிக்கலாம். பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதால் அரசு குறைந்தபட்சம் பெரியசாதிகளின் மக்கள் தொகை எண்ணிக்கையை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும் என்று இறுதியாக பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். அந்த இறுதிப் பரிந்துரையை உங்கள் உடனடிப்பார்வைக்காக கீழே கொடுக்கின்றோம். அந்த மறைக்கப்பட்ட முழு அறிக்கையும் தனியாக வெளியிடுகின்றோம்.

“Lastly we unanimously recommend that the Government may do well to conduct a thorough verification of the socio educational survey conducted by the commission and also check the population figures at least the major communities by reconciling the figures with estimated projected castewise population figures available with the Government, we are of the opinion regarding some major communities, the population figures are much inflated at the cost of several other communities as the whole operation was biased.”

உறவுகளே, சட்டப்படி போடப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையை மறைத்து மோசடியாக ஒரு நபர் கொடுத்த அறிக்கையை மட்டும் ஏற்றுக்கொண்டு கடந்த எடப்பாடி அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றி உள்ளது, சமூகநீதிக்கு நடந்த மிகப்பெரிய மோசடி என்பதை தமிழகத்தில் இருக்கின்ற அறிவார்ந்த பெருமக்கள் உணரவேண்டும். எல்லா சமூகங்களுக்கும் சரியான சமூகநீதி வழங்க உடனடியாக கணக்கெடுப்புச் சட்டம் 2008ன் படி முறையான கணக்கெடுப்பு அதிகாரியை நியமித்து நவீன தொழில்நுட்ப்பங்களை பயன்படுத்தி துல்லியமான சமூக கல்வி நிலைகள் குறித்தக் கணக்கெடுப்பை நடத்தி விரைவில் சமூகநீதியை காக்க வேண்டும். அதுவரை சமூகநீதியில் எத்தனை விதமான அழுத்தங்களைக் கொடுத்தாலும், இதை வெற்றி, தோல்வி அல்லது குறைந்த வாக்கு, அதிகவாக்கு என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், தமிழகத்தின் பொதுப்பிரச்சனை என்ற அடிப்படையில் எண்ணற்ற ஏழை-எளிய சிறிய சமூகங்களின் வாழ்வாதாரங்கள் கொள்ளை போவதைத் தடுக்க வேண்டும் என்று மன்றாடி வேண்டிக்கொள்கிறோம். அந்த ஆணையத்தின் உண்மை அறிக்கையை அனைத்து அறிஞர்களும், மக்களும் படித்துப் பார்க்குமாறும் மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றோம்.




















சீர்மரபினர் நலச்சங்கம்,சென்னை.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved