🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உள்இடஒதுக்கீடு விவகாரம் - உயர்நீதிமன்றம் வழியை பின்பற்றுக!

2.7.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த வில்லிவாக்கம் சந்தீப்குமார் வழக்கில்தான் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை.  இதைத்தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கருத்தை மறுத்து சீர்மரபினர் நலச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு!..

உறவினர்களே, சமூக ஊடகங்களிலும் சில பத்திரிகைகளிலும் 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து விட்டதால் தமிழக அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துவிட்டது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அவற்றையெல்லாம் படிக்கின்ற 115 சமூக உறவுகள் வெந்த புண்ணில் வேலைப்  பாய்ச்சியது போன்ற ஒரு உணர்வைப்பெறுகின்றனர். ஆனால் இந்தக் கூற்றில் கடுகளவும் உண்மை இல்லை. நாம் ஏற்கனவே பல மறுக்கமுடியாத சட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று நிரூபித்திருக்கின்றோம். மேலும், உச்சநீதிமன்றத்தில் 2.7.2021 அன்று வந்த வழக்கு சந்தீப் குமார் என்ற வில்லிவாக்கத்தில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், இந்த சட்டம் என்னுடைய உரிமையை பறிப்பதாக இருக்கிறது, அதனால் கணக்கெடுப்பு நடத்திவிட்டுத்தான் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். எனவே அச்சட்டத்திற்கு தடையாணை வேண்டும் என்று போட்ட வழக்குத்தன் அது. அதில்தான், உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்து இருக்கிறது. 

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் 10.5 விழுக்காடு சட்டத்தை செயல்படுத்த முடியாது என்று தெளிவாக நிர்வாக உத்தரவாக பிறப்பித்திருக்கின்றது. அது ஒரு நிர்வாக முடிவாக இருந்தாலும், அந்த முடிவு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து நிர்வாகத்தினரையும் கட்டுபடுத்தும். எனவே 10.5 சதவீதத்தை செயல்படுத்துவதற்கு நீதிமன்றத்தின் மூலமாக தடை உள்ளது. மேலும், கடந்த காலங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகளில், நீதிமன்றங்கள், எதிர்தரப்பை கேட்காமல் தடை கொடுக்க முடியாது என்றுதான் வாய்மொழியாக கூறியுள்ளதே தவிர எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் தடையாணை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.அதைவிட மேலாக எந்த உத்தரவிலும் தடையில்லை என்று ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. எல்லா வழக்குகளிலும் எதிர்த்தரப்புக்கு அறிவிப்பு கொடுங்கள் என்பது மட்டும் தான் உத்தரவு. மேலும் உச்சநீதிமன்றம் ஒரு வழக்கை ஏற்றுள்ளது என்றால் அதில் முக்கியமான சட்டச் சிக்கல்கள் உள்ளது என்று பொருள். எனவே தடைகோரும் மனுவில் உத்தரவு பிறப்பிக்கும் வரை 10.5% இடஒதுக்கீடு சட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்பதுதான் சட்டமரபு. மேலும் முக்கிய வழங்கு நிலுவையில் உள்ளது என்பது வேறு, இடைக்கால தடைமனுவு நிலுவையில் உள்ளது என்பது வேறு. மேலும் அதில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதும், எதிர்தரப்பைக் கேட்டுவிட்டு கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். எனவே நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது என்பது அர்த்தமற்றது.

தமிழக அரசாங்கம் சட்டப்படி, தர்மப்படி, எடப்பாடி அரசு கொண்டுவந்த அராஜகமான, அநீதியான சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கின்ற சட்டத்தைப் பகுத்தறிவுக் கொள்கையில் வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு வாக்குக்காக செயல்படுத்தாது என்று நம்புகின்றோம். அதைவிட அரசியல் வியாபாரத்திற்காக எதிர்க்கட்சிகள் எடுத்தமுடிவை ஆதரைத்து வாக்களித்த மக்களை புறக்கணித்தால் அந்த பாவம் அரசையே சேரட்டும். அது திமுகவின் எதிர்காலத்தை பெரிய அளவில் பதிக்கும் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. ஊடகங்கள் ஊதிம் பிம்பம்வேறு உணர்வோடு உரைந்துள்ள உண்மைவேறு என்பதை ஆட்சியாளர்கள் உணர்வார்கள் என்று நம்புவோம். கடந்த காலங்களில் பா.ம.க.வை நம்பி பின்னடைவை சந்தித்ததையும், இப்போது அது வெறும் ஊடகபிம்பமாக மாறியுள்ளது என்பதை நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே அது போன்ற ஒரு நிகழ்வு நடக்காது என்று நம்புவோம். கண்டிப்பாக அங்கே இருக்கின்ற பெருமக்கள் அத்தனைபேரும் கடுகளவேனும் உண்மையை சீர்தூக்கிப் பார்ப்பார்கள். எனவே பொது வெளியில் வருகின்ற வதந்திகளை நம்ப வேண்டாம். 

அதே சமயத்தில் தமிழகத்தில் 115 சமூகங்கள் இருக்கின்றார்கள் என்று கேடுகெட்ட எடப்பாடி அதிமுகவிற்கு உரைக்கின்ற வகையில், குறிப்பாக  தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் இருக்கின்ற உறவுகள் ஒருங்கிணைந்து பெரிய அளவில் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே தொடர்ந்து மாற்று சமூகங்களிடையே உணர்வுகளை புண்படுத்தாமல், சட்டத்திற்கு உட்பட்டு, நமது பிள்ளைகளுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து, அநீதியான இந்த சட்டத்தை இறுதிவரை உறுதியோடு எதிர்ப்பதற்கு முழு ஈடுபாட்டோடு எல்லா சிறு குறு இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். 115 சமுதாயத்தின் சார்பாக நடக்கின்ற இயக்கங்களும் சங்கங்களும் அரசியல் காரணங்களுக்காக ஒருதலைப்பட்சமாக நடப்பது நம் இனங்களுக்கு செய்கின்ற மாபெரும் துரோகம். இந்த காலகட்டத்தில் நமது உரிமைகள் கொள்ளை போயிருக்கின்றது, எடப்பாடி அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து தமது பிள்ளைகளுடைய பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு இருக்கிறது. எனவே எல்லா அமைப்புகளும் எல்லா சங்கங்களும் இதை உணர்ந்து அரசியல் நோக்கங்களை தவிர்த்து உரிமையை பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கின்ற சமூக நீதியை பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டும். பொது வெளியில் உண்மையை எடுத்து பேசுகின்ற நிலை உருவாகவேண்டும். 

தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்று அனைத்து சமுதாய அமைப்புகளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 

சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 115 சமூகங்கள்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved