🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முன்னாள் முதல்வர் புகைப்படம் எரிப்பு! - வலுக்கும் போராட்டம்!

பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை  தொடங்கும் நிலையில் வன்னியர் உள்ஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள 115 சமூகங்களின் மாணவ-மாணவியருக்கு இடம் கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. எந்தவித புள்ளிவிபர ஆதாரமுமின்றி, சட்டமன்ற விவாதமோ, கருத்துக்கேட்புக்கூட்டமோ நடத்தாமல், சட்டவழிமுறைகளையோ, நீதிமன்ற உத்தரவுகளையோ அலசி ஆராயாமல் முந்தைய எடப்பாடி க.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசு திட்டமிட்டு தங்களை பழிவாங்கி விட்டதாக இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இச்சமூகங்களெல்லாம் ஒன்றிணைந்து "சமூகநீதி கூட்டமைப்பு" என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, கடந்த 11.07.2021-இல் மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று ( 18.07.2021 ) தமிழகம் முழுவதும் 115 சமூகங்கள் சார்பில் வன்னியர் உள்ஒதுக்கீடு மூலம் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழ்படுத்தியதாக குற்றம் சுமத்தி அதற்கு காரணமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி.க,பழனிச்சாமி அவர்களின் உருப்படத்தை நடத்தி வருகின்றனர். 

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர், கரூர்.


தொட்டிய நாயக்கர் சமூகத்தினர், நாமக்கல்.


சமூகநீதி கூட்டமைப்பினர், சென்னை.


வேட்டுவக்கவுண்டர் சமூகம், ஈரோடு.


மருத்துவர் சமுதாயம், திருப்பூர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved