🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாக்குறுதிக்கு மாறாக வாக்குவங்கிக்காக செயல்படுவதா? - தமிழக அரசுக்கு கடும் கண்டனம்!

மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் உள்ள 116 சாதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு மட்டும் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த எடப்பாடி தலைமையிலான அரசு கொண்டுவந்ததை நேற்று வெளியிட்ட அரசாணை மூலம் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது தமிழக அரசு. 115 சமூகங்களை பாதிக்கும் இந்த அரசாணைக்கு தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த விடுதலைக்களம், இராஜகம்பளத்தார் கூட்டமைப்பு, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், நாமக்கல் தொட்டிய நாயக்கர் நலச்சங்கம், இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. அவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டபின் தமிழகத்தை இந்தியாவில் சிறந்த மாநிலமாக்க பல அறிஞர்குழுக்களை நியமித்து ஆலோசனை பெற்று செயல்படத்துவங்கியது மக்களின் மனங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றியது. 75 நாட்கள் சரியான திசையில் சென்றுகொண்டிருந்த திமுக அரசு, தனது முதல் சறுக்களை நேற்று வெளியிட்ட வன்னியர் உள்ஒதுக்கீடு மூலம் துவங்கியுள்ளதோ என்ற அட்சத்தை உருவாக்கியுள்ளது. கடந்த எடப்பாடி தலைமையிலான அரசு எப்படி எந்தவித ஆலோசனையும், விவாதமும் இன்றி மூடிமறைத்து இச்சட்டத்தைக் கொண்டுவந்ததோ, அதே வழியில் பலதுறைகளிலும் வல்லுனர்குழுக்களின் ஆலோசனை பெற்று செயல்பட்டுவரும் திமுக அரசு, 115 சமூகங்களைப்பாதிக்கும் வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை பலரும் எதிர்த்து போராடிவரும் நிலையில், முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக, யாருடைய ஆலோசனையோ (அன்று காலையில் உயர்கல்வி அமைச்சர், வன்னியர் உள்ஒதுக்கீடு விசயத்தில் முதல்வர்தான் முடிவு செய்வார் என்று குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது), பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களின் கருத்துக்களை கேட்காமலும் எடப்பாடி அரசு சென்ற அதேவழியில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் செயல்பட்டுள்ளது தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலுக்கு துணைபோயிள்ளது மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

எடப்பாடி தலைமையிலான அரசை அடிமை அரசு, எடுபிடி அரசு என்று கடுமையாக விமர்சனம் செய்துவந்த அன்றைய எதிர்க்கட்சித்தலைவர், திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் வாக்களித்ததிற்கும் மாறாக, நீதியரசர் குலசேகரன் ஆணையத்தின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்கள் வருவதற்கு முன், மருத்துவர் இராமதாஸ் அறிக்கை வெளியிட்ட ஒருசில மணிநேரங்களில் ஒருசாதிக்கு மட்டும் அரசாணை வெளியிட்டதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். 

தமிழக அரசுக்கும், திமுக-விற்கும் உண்மையிலேயே சமூகநீதியின்பாலும், 115 சமுதாயச்சேர்ந்த வருங்கால சந்ததியினர் மீதும் அக்கறையிருக்குமானால், உடனடியாக உள்ஒதுக்கீடு அரசாணையை திரும்ப்பப்பெற்று, ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்ததுபோல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சாதியினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கி தமிழகத்தில் சமூகநீதியை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved