🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காலத்தை வென்று நிற்கும் ஊமைத்துரை வீரம்! - அமைச்சருக்கு நன்றி!

அரைவட்ட வடிவில்,அடுக்கடுக்காக பார்வையாளர்கள் அமர்வதற்கேற்ப இருக்கை அமைப்பு.

கீழே காலி இடம்.

பார்ப்பதற்கு ரோமானிய,கிரேக்க காலத்திய அரசுகளின் கிளாடியேட்டர் டைப் ஓப்பன் தியேட்டர் போன்று இருக்கும் இது எந்த இடம் தெரியுமா?

பாளையங்கோட்டை சிறைச்சாலை.

பிரிட்டீஷ்காரர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்த, வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை இந்த பாளையங்கோட்டை சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த சிறையின் அறையை தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது போல வேடமணிந்து வந்து,சிறையை உடைத்து,எதிர்த்த பிரிட்டீஷ் படைகளின் உடலை மண்ணுக்கும், உயிரை விண்ணுக்கும் அனுப்பி, ஊமைத்துரையை மீட்டுக் கொண்டு சென்றனர் மருது பாண்டியர்கள்.

ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டையின் ஒரு பகுதி இப்போது அரசு அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கின்றது.


அருங்காட்சியக வளாகத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களின் சீரிய முன்னெடுப்பில் இப்போது எழிலுற அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி அரங்கினைப் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்திருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்.

இந்த பாளையங்கோட்டை சிறைச்சாலையில் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞரும்,மக்கள் தலைவர் வைகோவும் கைதிகளாக அடைக்கப்பட்டு இருந்தனர். (நன்றி:துரை மோகன்ராஜு)

ஆயிரக்கணக்கான பொதுமக்களும், வரலாற்று ஆய்வாளர்களும் வந்துசெல்லக்கூடிய வகையில் அருங்காட்சியமும், திறந்தவெளி அரங்கமும் அமைத்ததின் மூலம் மாவீரன் ஊமைத்துரையின் வீரத்தையும், புகழையும்  தினமும் ஆயிரக்கணக்கானோர் நினைவுகூர்ந்து செல்ல வழிவகைசெய்து ஊமைத்துரைக்கு புகழ்சேர்த்த தமிழக அரசுக்கும், திறந்துவைத்த தமிழக அமைச்சர் மாண்புமிகு.தங்கம் தென்னரசு அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியருகும் கம்பளத்தார்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved