🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாயக்கர்களின் 300 ஆண்டுகால வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிய அமைச்சருக்கு நன்றி!

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பெரியபுலியூர் ஊராட்சியில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு சொந்தமான 300 ஆண்டு கால பழமை வாய்ந்த  மாலா கோவில் (முன்னோர் நடுகல் வழிபாடு செய்யுமிடம்) உள்ளது. இந்த இடத்தில் ஓடை அமைக்க சிலர் முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து அரசு ஆவணங்களை சரிபார்க்கையில், மாலாகோவிலுக்கு சொந்தமாக 2.18 ஏக்கர் இருப்பது தெரியவந்தது. இந்நிலத்தை ஒட்டியுள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த தோட்டங்களோடு பெரும்பகுதி இணைந்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் மாற்று சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கம்பளத்தார் வாக்குக்கு கட்டுப்பட்டு, உங்கள் சொத்து எங்களுக்கு தேவையில்லை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே இதில் அரசியல் செய்ய நினைத்த சிலர்,  இது அரசுக்கு சொந்தமான ஓடை என்றும் அங்கு பாசனக்குட்டை அமைத்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசனவசதி பெறுமென்றும் ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து உடனடியாக களமிறங்கிய மாவட்ட நிர்வாகம் அங்கு பாசனக்குட்டை அமைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலைக்களம் கட்சியின் தலைக்களம் கட்சியின் சார்பில் 12.07.2021-திங்களன்று, ஈரோடு இரயில் நிலையம் அருகில் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து இப்பிரச்சினை வீட்டுவசதித்துறை அமைச்சர் மாண்புமிகு.சு.முத்துசாமி அவர்களின் கவனத்திற்கு சென்றது. நேரடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வுநடத்தி, அரசு ஆவணங்களை சரிபார்த்து தொட்டிய நாயக்கர்களின் உரிமையை உறுதி செய்தார்.


இந்தப்பிரச்சினை வெளியாகியவுடன் தமிழகம் முழுவதுள்ள தொட்டிய நாயக்கர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு கம்பளத்தார் சமூகத்தின் 300 ஆண்டுகால வழிபாட்டு உரிமையை உறுதிசெய்து, நியாயத்தின் பக்கம் நின்று தீர்ப்பு வழங்கிய அமைச்சருக்கு கம்பளத்தாரின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


இக்கோயிலின் வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்க போராட்டகளத்தில் இறங்கிய விடுதலைக்களம் கட்சிக்கும், அதில் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக நடுரோட்டில் நின்று கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்திய வழக்கறிஞர் நல்வினை.விஸ்வராஜு அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுக்களும்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved