இன அரசியல் -1 : மனித இனத்தின் தோற்றமும் - பரவலும் ( 2 )
முன்மனிதன்:
ஏறத்தாழ மனிதனையொத்த 'முன்மனித (Hominid) இனங்கள் கடந்த 48 லட்சம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல லட்சம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்து விட்டன. அவற்றுள் "ஹோமோ எரக்டஸ்" என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. குரோமக்னான் மனிதன் பீகிங் மனிதன், சாவக மனிதன், அத்திரம்பாக்கம் பாசில் மனிதன் ஆகியவர்கள் ஏறத்தாழ 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இந்த ஹோமோ எரக்ட்ஸ் வகையைச் சேர்ந்தவர்களே. ஐரோப்பாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிக்கப்பட்டுவிட்ட நியான்டர்தல் இனமும் முன்மனித இனமே. இந்த 'முன்மனித இனங்கள்" எவற்றிடையேயும் 'மொழி" உருவாகவே இல்லை.
இப்பொழுதுள்ள மனிதர்களாகிய AMH வகையைச் சார்ந்த நம் மனித இனம், கடந்த ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின்வருமாறு பரவியது:
கண்டங்கள் நகர்வுக் கொள்கையின்படி (Continental Drift) கண்டங்கள் கடந்த 25 கோடி ஆண்டுகளாகப் பிரிந்து நகர்ந்துள்ளன. எனினும் உலகில் இன்று உள்ள கண்டங்கள் எல்லாம் இப்போதுள்ள உருவை ஏறத்தாழ ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்துவிட்டன. அதற்குப் பின்னர் கண்டம் அளவுக்கு (Continental Proportions) பெரு நிலப்பகுதி எதுவும் கடலுக்குள் மூழ்கவில்லை. ஆயினும் பனியூழி முடிவில் கி.மு 8000 வாக்கில் (பனிக்கட்டி உருகி கடல் மட்டம், சுமார் 300 அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப் பகுதியாகிய கண்டத்திட்டு (Continental Shelf) ஏறத்தாழ இருநூறு கல் அளவுக்கு கடலுள் மூழ்கியது. அவ்வாறு அக்காலக் கட்டத்தில் தமிழகத்தைச் சுற்றியும், தென் திசை உட்பட சில நூறு மைல் தொலைவும் கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கிய நிலப்பகுதியையே கழக இலக்கியங்களும் களவியல் உரையும் சுட்டுகின்றன என்பதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவதாகும்.
ஆப்பிரிக்காவிலிருந்து தற்கால மனிதன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து சென்றது தென்னிந்தியா வழியாக இருக்கலாம். 
நன்றி:நவீணன்
இன அரசியல் -1 : மனித இனத்தின் தோற்றமும் - பரவலும் (1) படிக்க >>> https://thottianaicker.com/art/articles/2341-origin-and-spread-of-mankind

